வழிகேட்டின் வாசல்கள் பெண் இனமே

    7-01-2017 கட்டுரை எண் 1059 

      ஆக்கம் J. யாஸீன் இம்தாதி

                       !+++++++++! 

           Bismillahir Rahmanir Raheem 

           !! -------------------------------!! 


பெண்களுக்கு தரப்பட்டுள்ள வரம்பு இல்லா சுதந்திரமே அவர்கள் வழி கெடுவதற்க்கும் பிறர்களை வழி கெடுப்பதற்க்கும் மிகவும் முக்கியமான காரணம் 



வீட்டில் தாய்க்கு பிள்ளையாக மட்டும் தங்களை காட்டி கொள்ளும் பல இளம் பெண்கள் வெளி உலகில் தங்களை அழகான பெண்களாகவும் கவர்ச்சிகரமான பெண்களாகவும் காட்டுவதில் மட்டுமே அதிகமான அக்கரை செலுத்துகின்றனர்



உழைக்கும் பெண்களில் அநேகமான பெண்கள் அவர்கள் சிரமப்பட்டு சம்பாரிக்கும் தங்கள் வருமானத்தில் சரிநிகர்பாதி அவர்களின் அழகை ஆடவர்கள் ரசிப்பதற்க்கு மெருகூட்டி காட்டுவதற்கே செலவு செய்வதாக பியூட்டி பார்லர் உரிமையாளர்கள் 2017 புத்தாண்டு  அன்று தமிழன் பத்திரிக்கையில் கருத்து பதிவாக தகவல் தந்துள்ளனர் 



 உலகமே வியந்து பார்க்கும் அளவு தகவல் தொழில் நுட்ப துறையில் பெயர் பெற்றுள்ள பெங்களூரில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருப்பதற்க்கு அவர்களின் சீரழிவு சினிமா கலாச்சார மோகம் முக்கிய இடம் வகிக்கிப்பதாகவும் விரிவாக விளக்கம் தந்துள்ளனர் 



நடை பெற்று வரும் பாலின கொலைகள் கேவலங்கள் போன்ற தகவல்களை ஆதாரம் காட்டி எச்சரிக்கை செய்தாலும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத கற்பனைகளும் அவர்களை போன்ற அனுபவம் இல்லாதோரின் தவறான ஆலோசனைகளே அவர்களை ஈர்த்து அவர்களின் வாழ்வை பாழாக்கி வருகின்றது 



அந்நிய ஆடவர்களால் பல பெண்களின் நிம்மதியான வாழ்வு சீரழிக்கப்படுவது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மை பல பெண்களால் பல வாலிபர்கள் தங்கள் கடமைகளை மறந்து குடும்ப உறவுகளை மறந்து தங்கள் பொருளியல் சேமிப்பை வீண் விரயம் செய்து மூளை கெட்டு சுற்றுவதும் உண்மை 



ஆனால் உலகில் குற்றவாளி கூண்டில் ஆண்களை முன்னிலை படுத்தி கூறுவதையே காலம் காலமாக மனித சமுகத்தின் வழக்கமாகவும் தவறை பழி போடும் சாய்மானமாகவும் வேடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது 

போதை தீய பழக்கங்களின் துர்வாடை ஒரு ஆணிண் உடலில் இருந்து வீச்சம் ஏற்படுவதை போலவே பல இளம் பெண்களின் உடலில் இருந்தும் இன்று சாதாரணமாக வீசுகிறது 


 தூர பார்வையில் தனது உடல் அழகிற்க்கு முக்கியதுவம் தரும் பெண்களின் இனம் தங்கள் பகுத்தறிவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் சூழலை தங்களுக்குள் ஏற்படுத்தாத வரையிலும் 



 மனித படைப்பில் எந்த பெண்ணும் யாரை விடவும் மேனி ஈர்ப்பில் உலக அதிசயம் இல்லை என்ற எதார்த்த உண்மையை ஆண்கள் புரியும் வரையிலும் வழிகேடுகளும் ஒழுக்க கேடுகளும் தான் விண்ணை தாண்டி செல்லும் என்பதே உண்மை 



 எப்போது ரத்த பந்தம் இல்லாத ஒரு அந்நிய பெண்ணுக்காக ஒரு ஆணும் ஒரு அந்நிய ஆணுக்காக ஒரு பெண்ணும் விரக்தியை தேடுதலை ஏக்கங்களை அதிகமாக்குகிறார்களோ அல்லது கண் கலங்குகின்றார்களோ அல்லது தவறான வாதங்களை வழிமுறைகளை ஒருவருக்கு ஒருவர் பின்பற்றவும் அல்லது அதை நியாயப்படுத்தவும் முற்படுகிறார்களோ அப்போதே இரு சாராரும் உளவியல் ரீதியாக வழி கெட்டு மனநோயாளிகளாக மாறிப் போய் விட்டார்கள் என்பது தான் மறைமுகமான உண்மை




எதுவானாலும் இதனால் எற்படும் இழப்புகளும் அவமானங்களும் அதிகமதிகம் பெண் சமூகம் தான் காலம் காலமாக சுமந்து வருகிறது என்பதும் இனியும் அதிகமாக சந்திப்பார்கள் என்பதும் இயற்கையாக மாறி விட்டது 




 புத்தியுள்ளவர்களுக்கு தான் அவர்களின் பக்தி கூட சரியாக வேலை செய்யும் அந்த புத்தியே இல்லாதவர்களுக்கு அவர்களின் பக்தியால் எந்த விதமான வாழ்கை பாதுகாப்பும் கிடைக்க போவது இல்லை


எனவே ஈமான் மட்டும் இருந்தால் நாம் ஒழுக்கமாக வாழ்வோம் அல்லது பிறர்கள் ஒழுக்கமாக வாழ்வார்கள் என்று தங்கள் வழிகேடுகளுக்கு நியாயம் தேடாமல் அல்லது பிள்ளைகளின் வழிகேடுகளுக்கு தூபம் போடாமல் வழிகேடுகளின் வாசல்களை அடைத்தும் அது போல் சூழல்களை தவிர்த்தும் அதன் பின் ஈமானை காரணம் காட்டி வாழ்வதும் தான் மிகவும் முக்கியமானது


 عَنْ ثَوْبَانَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: طُوْبَي لِلْمُخْلِصِيْنَ، اُولئِكَ مَصَابِيْحُ الدُّجي، تَتَجَلّي عَنْهُمْ كُلُّ فِتْنَةٍ ظَلْمَاءَ 


தூய எண்ணம் உடையோருக்கு நற்செய்தி


அவர்கள் இருள்களின் ஒளி விளக்குகள், அவர்களின் காரணத்தால் பெரும் பெரும் குழப்பங்களும் விலகிவிடுகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறத்தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்


 நூல் --பைஹகீ 



 عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لَوْ اَنَّ رَجُلاً عَمِلَ عَمَلاً فِيْ صَخْرٍ لاَ بَابَ لَهَا وَلاَ كُوَّةَ، خَرَجَ عَمَلُهُ اِلَي النَّاسِ كَائِنًا مَا كَانَ


 கதவோ, துவாரமோ இல்லாத ஒரு பாறைக்குள் அமர்ந்து ஒருவர் ஏதேனுமொரு செயலைச் செய்தாலும் அது மக்களுக்குத் தெரிந்தே தீரும் அந்தச் செயல் நல்லதானாலும், தீயதானாலும் சரியே

 என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் நூல் பைஹகீ 



 زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ‌ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ‌ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ


‏ பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள் அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும் அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு 


 (அல்குர்ஆன் : 3:14) நட்புடன் J.இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்