உயிர் பிரியும் முன் ஒரு கனம் சிந்திப்பீர்

      ♦____♦____♦_____♦

ஆக்கம்.  J.யாஸீன் இம்தாதி
       ===================
Bismillahir Rahmanir Raheem
           ♦♦♦♦♦

ஒருவரின் மரண தகவலை கேள்விபடுகின்ற போது அந்த தகவல் ஒரு மனிதனை மூன்று விதங்களில் அணுகுகிறது

ஒன்று அந்த இறப்பு தகவலை கேள்வி படுவதால் எவ்விதமான கவலையோ சலனமோ நமக்குள் ஏற்படாது

இரண்டாவது தகவல் சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அந்த தகவல் ஓரிரு நாட்களில் மனதை விட்டு மறைந்து விடும்

மூன்றாவது தகவல் அந்த மரண தகவலை விரைவாக நம்மால் மறக்கவும் முடியாது அவர்களின் இழப்பால் பலர்கள் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள் மேலும் சிலர்கள் உளவியல் உடலியல் ரீதியாகவும் பல இழப்புகளை சங்கடங்களையும் அடிக்கடி சந்திப்பார்கள்

இவ்வாறு மூன்று வகையான மரண தகவல்களை மனிதன் எதிர் கொண்டாலும் இந்த மூன்று வகை மரண தகவல்களும் நமக்கு கற்று தரும் பாடமும் ஒன்று தான்

உலகில் பிறந்த எவரும் ஒரு நாள் அவர் எதிர் பார்க்காத நேரத்தில் அவரே விரும்பாவிட்டாலும் மரணம் அவரை தழுவி விடும்

ஒரு மனிதனின் கை எங்கே உள்ளது என்றால் அதை அவனது உடலில் காட்டுவான் இது போல் எல்லா உறுப்புகளையும் காட்டுவான்

அதே நேரம் அவன் உறுப்புகள் அனைத்தும் செயல்படுவதற்க்கு மூல காரணமாக இருந்த அவனது உயிர் எனும் ஆன்மா அவனது உடலில் இருக்கும் இடம் எங்கே என்று சொல்ல முடியுமா ?

அல்லது அந்த ஆன்மாவின் நிறத்தை சொல்ல முடியுமா?

அல்லது அந்த ஆன்மாவின் மணம் எத்தகையது என்று சொல்ல முடியுமா ?

அல்லது அந்த ஆன்மா எவ்வாறு உடலினில் பிரவேசித்தது என்று சொல்ல முடியுமா ?

அல்லது அந்த ஆன்மா மரண நேரத்தில் எவ்வாறு வெளியேறுகின்றது என்று சொல்ல முடியுமா ?

மனிதனின் கண்ணுக்கு தெரியாத ஜினோவையே உடைத்து ஆய்வு செய்த அறிவியல் மூளைகாரனுக்கு அவனது உடலில் இருக்கும் உயிரை பற்றி அடிச்சுவடே அறிய முடியாமல் இருப்பது தான் மனிதன் இறைவனின் அடிமை என்பதற்கே அடிப்படை ஆதாரமாகும்

ஆன்மா எங்கு உள்ளது என்பதை அறிந்தாலல்லவா அந்த உயிர் உடலில் இருந்து வெளியேறுவதை அவனால் தடுக்க முடியும்

வைரங்களும் இலட்சங்களும் கோடான கோடிகளும் அதிகார ஆணவங்களும் அதற்க்கு துணை புரிய முடியுமா ?

كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِي

َ அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்

(அல்குர்ஆன் : 75:26)

وَقِيلَ مَنْ ۜ رَاق

ٍ “மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது

(அல்குர்ஆன் : 75:27)

وَظَنَّ أَنَّهُ الْفِرَاق

ُ ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்

(அல்குர்ஆன் : 75:28)

وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاق

ِஇன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்

(அல்குர்ஆன் : 75:29)

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاق

ُஉம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது

      (அல்குர்ஆன் : 75:30)

மனிதன் கண்டு பிடிக்கும் சாதனங்கள் ஒவ்வொன்றுக்கும் காரணங்கள் உள்ளதாம் ஆனால் இறைவன் படைத்த அற்புதமான உயிர்களுக்கு மட்டும் காரணமே இல்லையாம் இதை ஏற்க முடிகின்றதா ?

எனவே உன் உயிர் உன்னை விட்டு பிரியும் முன்பே இதை பற்றி சிந்தி

وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيد

ُமரண வேதனை சத்தியத்தை கொண்டு (மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) நீ எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)

      (அல்குர்ஆன் : 50:19)

قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَل

“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும் பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக

(அல்குர்ஆன் : 62:8)

    •

   உயிரை இறைவன் தந்தது ஏன் ?

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்

மிக மன்னிப்பவன்

(அல்குர்ஆன் : 67:2)

          நட்புடன் J.இம்தாதி

Comments

  1. மரணத்தின் சிந்தனை எப்போதும் இருந்தாலே போதும்.‌எல்லா பாவகாரியங்களில் இருந்தும் தவிர்ந்து கொள்ளலாம்.
    பாரக்கல்லாஹ் ..அந்த சிந்தனையை ஊட்டியதற்கு.!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்