நீங்கள் ஏக இறைவனின் அடிமைகளா அல்லது புகழ்ச்சியின் அடிமைகளா

       நீங்கள் புகழ்சியின் அடிமையா  ?

================================
      31-10-17 - செவ்வாய் கிழமை

          ++++++++++++++++++++

              கட்டுரை எண்  1156

                      ************
                   ¡! بسم الله الرحمن الرحيم ¡!
        ======================
உடன் பிறந்த சகோதரர் சிரமப்படுவதை நேரில் பார்க்கும் போது கூட பத்து ரூபாயை அவரது சகோதரர்களுக்கு தர்மம் செய்ய முன் வராத பலர்கள் பிறர்கள் பார்ப்பார்கள் என்ற சூழல் இருந்தால் அறிமுகமே இல்லாத எவருக்கும் ஆயிரம் ரூபாயை கூட சாதாரணமாக தர்மம் செய்வதை பார்க்கிறோம் காரணம்

இறைவனுக்கு அடிமையாக வலம் வருவதை விட பிறர்களின் புகழ்ச்சிக்கும் விளம்பரத்திற்க்கும் அடிமைகளாக வலம் வருவதையே பலர்கள் அதிகம் விரும்புகின்றனர் நமது நல்ல செயல்பாடுகளை பார்த்தும் கேள்விபட்டும் நாம் இல்லாத நேரம் ஒருவர் நம்மை பிறர்களிடம் புகழ்ந்து பேசினால் அதுவே கவுரவம் நாம் இருக்கும் சபையிலோ அல்லது நாம் அறியும் முறையிலோ ஒருவர் நம்மை புகழ்ந்தால் அதற்க்கு பெயர் புகழ்ச்சி அல்ல மாறாக அவ்வாறு புகழ்வோர் நம்மை தந்திரம் செய்து ஏமாற்றுகிறார் என்றே பொருள்

இறையில்லத்திற்க்கு மின்விசிறிகளை கடிகாரங்களை வழங்கி விட்டு அன்பளிப்பு செய்தவர் இன்னவர் என்றும் கூட அர்ப்பத்தனமாக அந்த பொருளிலேயே பெயர் பதித்து கொடுப்போரும் உண்டு

இவர்கள் நல்ல விசயங்களுக்கு முன் நின்று அது நடந்த முடிந்த பின் நான் தான் இதை செய்தேன் நான் தான் அதை செய்தேன் என்று சுயசரிதை பாடும் நபர்களும் உள்ளனர்

இவர்கள் இறை அடிமைகளா அல்லது தற்புகழ்ச்சியின் அடிமைகளா ?

வலது கை செய்யும் தர்மத்தை இடது கை கூட அறிய கூடாது என்ற நபிமொழியின் உட்கருத்தை இவர்கள் சரியாக புரிந்தவர்களா ?

மறைமுகமாக செய்யும் ஒரு ரூபாய் தானத்தின் நன்மையை கூட கோடிகளை தானம் செய்து அதை பிறர்கள் பாராட்ட வேண்டும் என்று நினைப்போர்

அந்த கோடிகளின் மூலம் ஒரு நன்மையை கூட மறுமை நாளில் இறைவனின் சந்நதியில் நிச்சயம் பெற முடியாது

சுருக்கமாக சொன்னால் புகழை விரும்பி நல்லறங்களை செய்யும் எவரும் மறுமையில் அதன் மூலம் இகழை மட்டுமே இறை சந்நதியில் அடையப் போகிறார்கள்

பல வருடம் சிரமப்பட்டு நாம் திரட்டிய செல்வத்தை நெருப்பில் போடுவதும் ஒன்று தான் பல நல்லறங்களை செய்து விட்டு அந்த நல்லறங்களை புகழ்ச்சி எனும் சவக்குழியில் போடுவதும் ஒன்று தான்

عَنْ عَبْدِ اللهِ بْنِ

عَمْرٍوؓ قَالَ:سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ سَمَّعَ النَّاسَ بِعَمَلِهِ سَمَّعَ اللهُ بِهِ سَامِعَ خَلْقِهِ، وَصَغَّرَهُ، وَحَقَّرَهُ

எவர் தன்னுடைய செயலை மக்களிடையே விளம்பரப்படுத்துவாரோ அவருடைய முகஸ்துதியான அந்த செயலைக் கொண்டு

(இவர் புகழ் விரும்பி என்பதை) அல்லாஹுதஆலா தனது படைப்புகளின் காதுகள் வரை கொண்டு சேர்த்துவிடுவான்

மேலும், மக்களின் பார்வையில் அவரை இழிவடையவும், கேவலமடையவும் செய்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நூல் … தப்ரானி
عَنْ عَبْدِ اللهِ بْنِ قَيْسِ ن
ِ
الْخُزَاعِيِّؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ قاَمَ رِيَاءً وَسُمْعَةً لَمْ يَزَلْ فِيْ مَقْتِ اللهِ حَتَّي يَجْلِسَ

பிறர் பார்க்க வேண்டும் அல்லது புகழ் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு எவர் நல்ல காரியத்தில் ஈடுபடுவாரோ, அவர் அந்த எண்ணத்தை விடாதவரை அல்லாஹுதஆலாவின் கடும் வெறுப்புக்கு ஆளாகி இருப்பார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு கைஸ் குஸாயீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

                                        நூல் அஹ்மத்

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَؓ قََ: قَال
َ

رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ فِي الدُّنْيَا، اَلْبَسَهُ اللهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ اَلْهَبَ فِيْهِ نَارًا எவர் பிரபல்யம் என்ற ஆடையை உலகில் அணிவாரோ, கியாமத் நாளன்று அல்லாஹுதஆலா அவருக்கு கேவலம் என்னும் ஆடையை அணிவித்து, அதற்கு நெருப்பை மூட்டிவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

        நூல் .இப்னு மாஜா

            நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்