சோஷியல் மீடியா விபரீதம்
சோஷியல் மீடியா மோகத்தால்
ஏற்படும் விபரீதங்கள்
**************************
சோஷியல் மீடியா மோகத்தால் மனநோயாளிகளாக மாறி வரும் பெண்கள்
தங்கள் கண்ணியத்தை இழப்பதுடன்
பிற ஆடவர்களின் உயிரை பறிக்கவும் காரணமாகி வருகின்றனர்
மானத்தை மதிக்கும் பெண்
பேரூந்து பயணத்தில் ஒரு ஆடவன் தன்னை தீண்டினால் அருகில் இருக்கும் சகபயணியிடம் அல்லது பேரூந்து நடத்துபவரிடம் உடனடியாக தகவலை எத்தி வைத்து தன்னை தற்காத்துக்கொள்வாள்
தன்மானத்தை மதிக்கும்
எந்த பெண்ணும் தன்னை ஆடவன் எப்படியெல்லாம் தீண்டுகிறான் என்பதை அச்சூழலில் மொபைல் கேமராவில் படம் பிடித்து கொண்டே பயணம் செய்ய மாட்டாள்
சட்டப்படி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றாலும் கூட காலல்துறையை அணுகி தனக்கு ஏற்பட்ட அவலத்தை அவள் பதிவாக்கிய வீடியோ ஆதாரத்துடன் சமர்பிப்பாள்
இதை தாண்டி சோஷியல் மீடியாவில்
அந்த வீடியோவை பரப்பி
தன்மானம் பங்கப்படுத்தப்பட்டதை
உலகம் அறியும் விதமாக பரப்பி இனிமை அடையமாட்டாள்
கோழிக்கோடு வடகரையைச் சேர்ந்த
ஷிஞ்சிதா முஸ்தபா என்ற பெண் தனக்கு ஏற்பட்டதாக கூறும் அவலத்தை சோஷியல் மீடியாவிலே பரப்பியதின் காரணமாக
அவர் பயணித்த பேரூந்தில் இருந்த கோழிக்கோடு கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் (வயது 41) என்பவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்சியை எற்படுத்தியுள்ளது
இவ்விசயத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை அறியாது சோஷியல் மீடியாவில் வரும் செய்திகளை உடனடியாக பரப்புவதிலும்
தவறாக கீழ்த்தரமாக விமர்சிப்பதிலும்
ஆனந்தம் அடைந்த நபர்களும் அம்மனிதனின் தற்கொலைக்கு ஒரு வகையில் காரணமானவர்களே
பெண் என்பதற்காக உண்மை நிலையை அறியாது புற்றீசல் போல் பெண்களுக்கு குரல் கொடுக்கிறோம் எனும் பெயரில் செய்திகளை ஆராயாது பரப்பும் மனநிலை கேவலமானது
காரணம் அப்பெண் வெளியிட்ட வீடியோ காட்சியிலும் கூட வீடியோ எடுப்பதற்காக அப்பெண் சம்மந்தப்பட்ட நபரை விட்டு நகராது நிற்கிறாள்
அப்பெண்ணால் குற்றம் சுமத்தப்படும் நபரே அப்பெண்ணை விட்டு நகர்ந்து செல்வதை வீடியோ காட்சியில் அறிய முடிகிறது
அப்பெண் பயணம் செய்த பேரூந்தில் இடம் பெற்றிருந்த பயணிகளை விசாரித்து உரிய அதிகாரிகள் தகவல் தந்தால் மட்டுமே
அதன் உண்மை நிலையை அறிய முடியும்
தற்போது அப்பெண் தனது சோஷியல் மீடியாவை முடக்கி விட்டு தலைமறைவாகி இருப்பது அப்பெண்ணிண் மடமையாலும் சோஷியல் மீடியா மூலம் வரும் லைக் மற்றும் வருமானத்தின் மோகத்தாலும் ஏற்பட்டுள்ளது என்பதே நிதர்சன உண்மை
முஸ்லிம் சமூகத்தின் மீது தொடர் வெறுப்பையும் அவதூரையும் பரப்புவதில் இனிமை காணும் சங்கிகள் அப்பெண் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த ஒருவர் என்பதால் இந்த சம்பவத்தையும் வழமை போல் இந்து முஸ்லிம் பிரச்சனை என்ற கோணத்தில்
திசை திருப்பி சோஷியல் மீடியாவிலே வெறுப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்
கேடுகெட்ட காரியத்தை முஸ்லிம் பெயரில் இருக்கும் ஒருவர் செய்தால்
அதை இஸ்லாத்தோடும் முஸ்லிம் சமூகத்தோடும் இணைத்து பேசும் கீழ்த்தரமான நடவடிக்கையை சங்கிகள் எப்போதும் கைவிடமாட்டார்கள்
ஒரு புறம் இஸ்லாம் அதிகமான கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் கொக்கரிப்பார்கள்
மறுபுறம் இஸ்லாமிய கட்டுப்பாடுகளை பின்பற்றாத பெயர்தாங்கி முஸ்லிம்கள் செய்யும் தவறான செயல்களுக்கு இஸ்லாத்துடன் இணைத்து முடிச்சு போடுவார்கள்
சுதந்திரம் எனும் பெயரால் மூளைச்சலவை செய்யப்பட்டு மார்க்க உணர்வு இல்லாது தான்தோன்றிகளாக திரியும் பெண்கள்
தற்போது முஸ்லிம் சமூகத்திலும் பெருகி வருகின்றனர்
இதனால் உலகிலும் அவமானத்தை சுமப்பதுடன் மறுமையிலும் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவார்கள்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
20-1-2026
Comments
Post a Comment