2025 ரமலான் பாகம் இரண்டு
2025 ரமலான் மாதத்தின் தொடர் பாகம் இரண்டு ********************** இந்த நோய் இருந்தால் நோன்பை தவிர்க்க சலுகை உண்டா அந்த நோய் இருந்தால் நோன்பை தவிர்க்க சலுகை உண்டா என்ற கேள்வி பரவலாக ரமலான் மாதத்தை முன்னிட்டு கேட்கப்படுகிறது நோய்கள் பல வகையானது அதில் குறிப்பிட்ட நோய்களை பட்டியல் காட்டி நோன்பை தவிர்ப்பதற்கு இஸ்லாத்தில் வழிகாட்டல் இல்லை காரணம் எந்த நோயும் மனிதனின் உடல்நிலையை பொருத்து அதன் பாதிப்புகள் விளைவுகள் மாறுபடும் நீரழிவு நோயை அனுபவிப்பவர்கள் அனைவரும் ஒரே விதமான பாதிப்புகளை சமநிலையில் சந்திப்பார்கள் என்று உறுதியாக கூற இயலாது எந்த நோய் நோன்பு நோற்பதால் பாதிப்புகளை அதிகரித்து கொண்டே செல்லும் என்பதை நோயாளியால் தெளிவாக உணர முடிகிறதோ அது எந்த நோயாக இருப்பினும் அவர்களை பொருத்தவரை மார்க்கத்தில் ரமலான் மாதத்தில் நோன்புகளை தவிர்ப்பதற்கு சலுகையை பெறும் இதை உணர்ந்து செயல்படுவதே ஒ...