Posts

Showing posts from July, 2023

வடிக்கப்பட்ட மூளை

       சிந்தனையை செதுக்க நான்கு   சிந்தனையை மழுங்கச்செய்ய நான்கு                   *************** 1-வாங்கும் பட்டங்களை 2-மிளிரும் தோற்றங்களை 3-வகிக்கும் பதவிகளை  4-நிகழ்த்தும் உரைகளை வைத்து  எவரின்  மார்க்க ஞானத்தையும்  எடை போடாதீர்கள்  1-அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் 2-எதிர் கேள்விக்கு தொடுக்கும் பதில்கள் 3-தவறுகளை ஏற்கும் மனப்பக்குவம்  4-இயலாமையை  ஏற்றுக்கொள்ளும் தன்மை  போன்றவைகளை உரசியே ஒரு மனிதனின் மார்க்க உணர்வை  எடை போடுங்கள்  காரணம் முதலில் குறிப்பிடப்பட்ட  நான்கு அம்சங்களையும் ஒருவன்  தந்திரத்தின் மூலம் பிறரின் கருத்தை உள்வாங்குவதின் மூலம் வெளியில் காட்டிக்கொள்ள முடியும்  இரண்டாம் நிலையில் குறிப்பிடப்பட்ட நான்கு  அம்சங்களை சுயமாக  சிந்திப்பதை தவிர்த்து எளிதாக எவராலும் பெற்றிட முடியாது இதை மக்களும் உணராத காரணத்தினால் அறிஞனுக்கும்  அறிவிலிகளுக்கும் சமூகத்தில் வேறுபாடு தெரியாது போனது  அறிவிலிகளும் அறிஞர்களை போல்  வலம் ...

அய்யாமுல் ஜாஹிலிய்யா நவீன ஜாஹிலிய்யா

         அய்யாமுல் ஜாஹிலிய்யா                நவீன ஜாஹிலிய்யா                ********************           கிபி  578 ஆண்டு உலகம்          அய்யாமுல் ஜாஹிலிய்யா                       ••••••••••••• அய்யாமுல் ஜாஹிலிய்யா கற்பழித்ததாக வரலாறு இல்லை அய்யாமுல் ஜாஹிலிய்யா  தன்பாலினத்தை நோக்கியதாக வரலாறு இல்லை  அய்யாமுல் ஜாஹிலிய்யா மகளை வன்புணர்வு செய்த வரலாறு இல்லை அய்யாமுல் ஜாஹிலிய்யா தாயுடன் உறவு கொண்ட வரலாறு இல்லை  அய்யாமுல் ஜாஹிலிய்யா கள்ளக்காதலுக்கு  அனுமதி தந்த வரலாறு இல்லை அய்யாமுல் ஜாஹிலிய்யா விபச்சாரத்தை தொழிலாக கருதிய வரலாறு இல்லை  அய்யாமுல் ஜாஹிலிய்யா  மணவிருந்தில் கைகலப்பு செய்த வரலாறு இல்லை அய்யாமுல் ஜாஹிலிய்யா வரதட்சணை வாங்கியதாக வரலாறு இல்லை  அய்யாமுல் ஜாஹிலிய்யா  முழு நிர்வாணமாக திரிந்த வரலாறு இல்லை  அய்யாமுல் ஜாஹிலிய்யா ஆண் ...

நாசமாகும் நற்கருமங்கள்

           நாசமாகும் நற்கருமங்கள்                   *************** அமல்களில் விளம்பர மோகம் வைரசுகளை விட வேகமாக முஸ்லிம் சமூகத்தில்  பரவி வருகிறது   எந்தளவுக்கு விளம்பர மோகம் பரவுகிறதோ அந்தளவுக்கு நரகத்தின் வேதனை அதிகரிக்கும்  வலது கை செய்யும் தர்மம்  இடது கை கூட அறியக்கூடாது  என்றளவு நபியவர்கள் அமல்களில் தூய்மையை வலியுருத்தி உள்ளார்கள் பள்ளிவாசலுக்கு ஒரு மின்விசிறியை வாங்கி கொடுத்து விட்டு  அதன் சிறகுகளில் அன்பளிப்பு செய்தவர் இந்நபர்  என்று பதிப்பது  கடமையான ஹஜ்ஜை முடித்து விட்டு அல்ஹாஜ் என்று அடைமொழி போட்டு தம்பட்டம் அடிப்பது  இறையச்சத்துடன் நிறைவேற்ற வேண்டிய அமல்களை செல்பி புகைப்படம் எடுத்து சமூகவலைதளம் மூலம் பரப்பி லைக்குகளை எண்ணி பார்ப்பது  எளிதாக செய்ய வேண்டிய ஹஜ் கடமையை நடைபயணமாக்கி  அதன் மூலம் புகழில் பூரிப்பு அடைவது  இவை யாவும் மார்க்க ஞானம் குன்றியவர்களின் நடைமுறையே  அணியும் ஆடையில் தூய்மை தங்கும் இடத்தில் தூய்மை  உண்ணும் உணவில் ...