Posts

Showing posts from March, 2023

2023 ரமழான்

            2023  ரமழான் பாடம் ஒன்று                    *************** பள்ளிவாசல்களை  நிரப்புவதற்கு பெயர் அல்ல ரமழான்  !! ஈமானை இதயத்தில்  நிலைக்க வைப்பதற்கு பெயரே  ரமழான் ரமழான் மாதத்தை வழமை போல் இவ்வருடமும் கழித்து விடுவோம் என்று  நீ முடிவு செய்தால் ரமழானுக்கு நீ  தயாராகி  பயன் இல்லை  இறைவனை பற்றிய சரியான புரிதலுக்கு தான்  உன்னை  நீ முதலில்  தயார் படுத்த வேண்டும் ரமழான் ஈமான்தாரிகளின் மாதமே தவிர வேடதாரிகளின் மாதம் அல்ல ரமழான் பாவங்களை போக்கும்  மாதம் தானே தவிர பாவங்களுக்கு விடுமுறை விடும் மாதம் அல்ல  இதர மாதங்களில் எப்படியும் நடப்பேன் ரமழான் மாதத்தில் மட்டும் இப்படியே நடப்பேன் என்று நீ முடிவு செய்தால் நீ ரமழானை கண்ணியம் செய்யவில்லை  மாறாக ரமழானின் கண்ணியத்தையே நீ புரியவில்லை என்பதே உண்மை  கங்கையில் புனித நீராடுவதும் ரமழானில் பள்ளிகளை நிறைப்பதும்  சமம் அல்ல இறையில்லங்கள்  அனுதின தொழுகைகளுக்கு உரியது  ரமழான் மாதத்...

மரணமா சாத்தானா

       மரண சிந்தனையை முடக்கும்         ஆற்றல் உள்ளவனே சாத்தான்                ******************* ஆன்மீகவாதியாக இருந்தாலும் நாத்தீகவாதியாக இருந்தாலும் ஆரோக்யத்தில் சீராக இருந்தாலும் உடல் வலிமையில்  உயர்வாக இருந்தாலும்  பதவியில் முன்னனியில் இருந்தாலும் மரணம் அடைந்த உடலை  காணும் போது சில வினாடிகள்  அவனது கற்பனை நாமும் மரணம் அடைந்தால் இது போல் தான் காட்சி பொருளாவோம்  என்று கருதும் அந்த நேரத்தில் தான் ஒவ்வொரு மனிதனும்  தனது தோல்வியை அவனை அறியாமல் ஒப்பு கொள்கிறான்  அந்த எண்ணங்களை கூட சில நிமிடங்களில்  சீரழிக்கும் ஆற்றல் சாத்தானுக்கு உண்டு சாத்தான் மரணத்தை விட மோசமானவன் என்பது இதன் மூலமே நிரூபணம் ஆகும் அறுபது வயதை எட்டும் போது தன்னையே மனிதன் வெறுக்க துவங்குவான்  அவனுக்கு ஐநூறு வயதை இறைவன் கொடுத்தால் அதை விட நரகம் உலகில் அவனுக்கு ஏதும் இல்லை  இதை வெறுமனே படித்தால் நீ கடந்து செல்வாய் படித்த பின் சிந்தித்தால் இப்பதிவின் ஆழத்தை  நீ உணர்ந்து கொள்வாய்  وَمَنْ ن...

முடமாகி வரும் மார்க்க கல்வி

     முடமாகி வரும் மார்க்க கல்வி               ********************                 கட்டுரை எண்  1154                       ************ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக  உலக கல்வியை போதிப்பதற்க்கு ஒதுக்கும் நேரத்தில் கால் பகுதியை  கூட இஸ்லாமிய மார்க்க கல்வியை போதிப்பதற்கு ஒதுக்க முயற்சிப்பது இல்லை என்பது தான் பிள்ளைகள் வழிகேடுகளில் சிக்கி தவிப்பதற்கான மூல காரணம் உலக கல்வியை அடைவதற்கு நேரத்தை ஒதுக்குவார்கள் மார்க்க கல்வியை பெறுவதற்கு நேரம் கிடைத்தால் அனுப்புவார்கள் என்ற வேறுபாடை  சமூகத்தை உற்று நோக்குபவர்களுக்கு தெளிவாக புரிய முடியும் வளரும் பருவத்தில் உலக கல்வி யாவும் ஒரு மனிதனின் உலகியல் நோக்கத்திற்காக மட்டுமே பயிற்றுவிக்கப்படும் மருத்துவதுறை மதிப்பற்றதாக வருமானம் குறைந்ததாக இருந்தால் மருத்துவ படிப...