Posts

Showing posts from December, 2022

புதைக்கும் விதையே முளைக்கும்

      புதைக்கும் விதையே முளைக்கும்                    ******************                J . யாஸீன் ( இம்தாதி)                      *************** எதிர் காலம் தற்போது காணும் உலகின் சீரழிவை விட பல மடங்கு கேவலமாக இருக்கும் தற்கால சந்ததிகளே  சீரழிவில் சிக்கி சின்னாபின்னமாகி வருவதை கண் முன் காணுகிறோம் புதைக்கும் விதையே முளைக்கும் இதை பெற்றோர்கள் உணர வேண்டும் எந்த பருவத்தில் சந்ததிகளை இறைவன் உங்கள் கட்டளைக்கு இணங்கும் விதம் வடிவமைத்துள்ளானோ  எந்த பருவத்தை சந்ததிகள் பெற்றோரை அஞ்சி நடக்கும் தன்மை உடையவர்களாகவே செதுக்கியுள்ளானோ அந்த பருவத்தில் சந்ததிகளை  உற்று கவனியுங்கள்  தேவையான போதனைகளை கற்று கொடுங்கள் கண்டிக்க வேண்டிய விசயங்களை கண்டு கொள்ளாது இருந்து விடாதீர்கள் சின்ன குழந்தைகள் தானே வளரும் போது மாறி விடுவார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் இருந்து விடாதீர்கள்  அவ்வாறு தர்க்கம் செய்தவர்களே தங்கள் பிள்ளைகளால் கேவலத்தை அதிகம் சந்தித்துள்ளனர் கண்ணாடி முகத்தின்  அழகை உரியவருக்கு வார்த்தை வடிவில் சொல்லி தருவது இல்லை கண்ணாடியின் காட்சியே பிரதிபலிப்பை காட்டி விடும்  அதே போல் பெற்றோரின் நடவடிக்கைகள

பெற்றோரும் பிள்ளைகளும்

    பெற்றோர்களின் புலம்பல்களும்          பிள்ளைகளின் அறிவீனமும்            ***********************              J . யாஸீன் இம்தாதி                  ***************** பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது வைத்துள்ள குருட்டு நம்பிக்கையை பயன்படுத்தி வழிகேடுகளின் பக்கம் பிள்ளைகள் விரைந்து செல்கின்றனர் குறிப்பாக பெண் பிள்ளைகள் மீது பெற்றோர்கள்  வைத்துள்ள நம்பிக்கையை இளம் பெண்கள் நாசமாக்கி விடுகின்றனர்  படிக்கும் வயதில் சகமாணவனுடன் ஊர் சுற்றுவது  குருட்டு நம்பிக்கையில் கற்பை பறி கொடுப்பது  மாற்றானுடன் மதி மயங்குவது போன்றவை முஸ்லிம் சமூகத்திலும்  அதிகரித்து விட்டது  இந்நிலையில் இவர்களின் அருவெருப்பான நடவடிக்கைகள் அவர்களை அறியாமலேயே CCTC கேமரா மற்றும் பிறர் மொபைல்களில் மறைமுகமாக  படமாக்கப்பட்டு சமூகவலைதளம் மூலம்  பரப்பப்பட்டும் விடுகிறது  நியாயமாக பரப்பியவர்கள் மீது குடும்பத்தார்களுக்கு  எற்படும் ஆத்திரம் தங்களின் பிள்ளைகளின் மீதும் தங்களின் அறிவீன வளர்ப்பு முறையின் மீதும் தான் குடும்பத்தார்களுக்கு எற்பட வேண்டும்  இந்தளவுக்கு பெயரை கெடுக்கும் அளவு பிள்ளைகள் நடந்தால்  அந்தளவு அவர்களின் உள்ளத்தில் ந

ஏகத்துவம்

    முஸ்லிமின் அடிப்படை அறிவு             *********************            J . யாஸீன் இம்தாதி                       ************ இஸ்லாத்தின் அடிப்படை அறிவு ஏகத்துவம்       !! லாயிலாஹ இல்லல்லாஹ் !!                   என்ற தத்துவம்  இறைவனின் ஆற்றல் வேறு எதற்கும் இல்லை என்பதே இவ்வார்த்தைகளின்  சாரம்  இந்த சாரத்தில் உறுதியாக இருப்பதற்கு அடிப்படை தேவை இறைவன் தொடர்பான  கல்வி  இறைவன் என்றால் யார்?  இறைவனின் பண்புகள் என்ன ? இணை வைத்தல் என்றால் என்ன ? இணை வைத்தலின் விளைவுகள் என்ன?  என்பது தான்  இந்த விளக்கங்களை உள்வாங்காத முஸ்லிம்களிடம் ஆயிரமாயிறம் விளக்கங்களை எடுத்து கூறினாலும் இணை வைத்தல் என்ற மாபாதக செயலில் இருந்து நிச்சயம்  அவன் விடுபட மாட்டான் அறிவியல் சாதனைகளை  சாதிப்பவனும் சரி  மருத்துவனும் சரி  படித்து பட்டம் பெற்றவனும் சரி  படிக்காத பாமரனும் சரி  அதிகாரத்தில் இருப்பவனும் சரி ஆலீமாகினும் சரி ஆலீமாவாகிலும் சரி  இது தான் எதார்த்த உண்மை இறைவன் அல்லாதவர்களின் துணை கொண்டு( வசீலா அடிப்படையில்)  பிராத்தணை செய்யலாமா இறைவன் அல்லாதவர்களிடம் நேரடியாக பிராத்தணை செய்யலாமா  என்ற ஆராய்சியே முஸ்லிம்களை