Posts

Showing posts from February, 2022

உள்ளாட்சி வெற்றியாளர்கள்

      உள்ளாட்சி தேர்தலில் வெற்றி      பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களுக்கு                        ♣♣♣♣♣              J . YASEEN IMTHADHI                கட்டுரை எண் 1435                       22-02-2022                          ******* உள்ளாட்சி தேர்தலில் அரிதான சில வெற்றிகளை கூட முஸ்லிம் சமூகம் பெரிதாக பாராட்டுகிறார்கள் என்றால்  அதற்கான வெற்றியாளர்கள் இனி தான் தங்களுடைய விசுவாசத்தை அதன்  பணிகள் மூலம் செயல்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் அரசியல் என்றாலே கூட்டுக்களவாணிகள் என்ற எண்ணமே நாட்டு மக்களுக்கு மேலோங்கி உள்ளது  அந்த கூட்டுக்குள் தான் நீங்களும் தற்போது அடி எடுத்து வைத்துள்ளீர்கள் என்பதை மறவாதீர்கள்  அதே விமர்சனத்திற்கு உரியவர்களாக நீங்களும் மாறி விடாதீர்கள் காரணம் இதுவரை பாராளுமன்றம் சட்ட மன்றத்தில் அங்கம் பெற்றவர்கள் கூட இதுவரை முஸ்லிம் சமுதாயம் ஒட்டு மொத்தமாக பாராட்டும் அளவு தனித்துவ  பட்டயம் பெறவில்லை  அதற்கு காரணம் ஈமான்தாரிகளின் பட்டறையாக இந்திய அரசியல் கூடாரங்கள்  இல்லை  கடவுள் மறுப்பாளர்களாக இணை வைப்பாளர்களாக பிழைப்பதற்கு வருகை தந்தவர்களாக லஞ்சம் வாங்குபவர்களாகவே அடாவடியில் ஈடுபட

வீண் விவாதம்

    அவசியமற்ற தர்கங்களும்      சூழ்நிலைகளை புரியாத             அறிவீனர்களும்                   ♦♦♦♦♦             J . YASEEN IMTHADHI             கட்டுரை எண் 1434                       7-02-2022                          ******* சமூகத்தில் எது முக்கியமோ அதை பற்றிய கருத்துக்களை மையப்படுத்துவதை தவிர்த்து விட்டு  அதை ஒட்டி முஸ்லிம் சமூகத்திடம் நிலவி வரும் கருத்து வேறுபாடுகளை விவாதிப்பது என்பது நம்மை நாமே திசை திருப்பும் மடமையாகும் இவ்வாறு திசைமாறி பூசல்கள் வளருவதை தான் எதிரிகளே எதிர் பார்கின்றனர் அதற்கு ஏற்று சமூகத்தில் பலர் பலியாகி வருகின்றனர் ஓட்டு யாருக்கு போடுவது ? என்பதை யோசிக்கும் நேரம் ஏன் ஒரே சமுதாயம் பல அணியில் நிற்கிறது  ? என்று  சமுதாய பிளவை பற்றி அந்நேரம்  விவாதிப்பதும் அர்த்தமற்றது காரணம் அவ்வாறு விவாதிப்பவரும் ஒருவருக்கு தான் ஓட்டு போடுவாரே தவிர அவரும் சமுதாயமே முடிவு செய்யும் ஒருவரை கபடம் இல்லாது ஏற்கப்போவது இல்லை கல்லூரி மாணவிகள் பர்தா அணிவதற்கு  தடை என்ற பிரச்சனையை  நாட்டு மக்கள் அனைவரும் எதிர்க்கும் நேரம் பர்தா என்றால் என்ன தெரியுமா? முகத்தை மூடுவது தான் பர

மடமை வாதம்

       மார்க்கத்தை பறைசாற்ற        மடமையை கையாளாதீர்                ÷÷÷ ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷           J . யாஸீன் இம்தாதி                        ********* மார்க்க ரீதியாக ஒரு நபருக்கு அல்லது இயக்கத்துக்கு மறுப்பு பதிக்க முனைவோர் வெளிப்படும் கருத்தை மையமாக வைத்து மறுப்பு சொல்ல முயற்சிப்பது தான் சரியான அணுகுமுறை  அதை தவிர்த்து விட்டு வெறுப்பை மையமாக வைத்து மறுப்பு சொல்ல துவங்கினால் சத்தியத்தை சரியான முறையில் பிறருக்கு புரிய வைக்க இயலாது  பல விடயங்களில் சரியான புரிதலின் பக்கம் மக்கள் செல்லாது தவிப்பதற்கு இது தான் மூல காரணம்  சமூகவலைதளங்களில் அநேகரின் அணுகுமுறை  இதே தோரணையை தான் பிரதிபலிக்கிறது  குறிப்பாக சலபுகளை பற்றி கருத்துக்களை பரிமாறும் இரு சாராரில் அநேகர் இதே வழிமுறையில் பயணிப்பது அவர்களிடம் குடிகொண்டிருக்கும் அநாகரீகத்தையும் அருவருப்பையும்  தருகிறது  மார்க்கத்திற்காக குரல் கொடுப்போர் அவர்களை அறிந்தும் அறியாதும் சாத்தானின் வலையில் சிக்கி தவிப்பது வேதனைக்குரியது  சலபு என்ற வார்த்தைக்கே வழிகேடர் என்ற போலியான சித்திரத்தை தருவதும்  சலபுகளை தவிர வேறு எவரும் ஆய்வே செய்ய இயலாது என்ற தோரணையில் கருத்