கடக்க வேண்டிய பாதை
தவ்ஹீத்வாதிகள் கடக்க வேண்டிய பாதை கழிக்க வேண்டிய சிந்தனை *********** கட்டுரை எண் 1402 J . Yaseen imthadhi Bismillahir Rahmanir Raheem ***** கடந்து வந்த பாதை தரும் வெற்றியை விட கடக்க வேண்டிய பாதையை நோக்கிய சிந்தனையே மனித வாழ்வை செவ்வை படுத்தும் குர்ஆன் ஹதீஸ் என்பது மட்டுமே இஸ்லாத்தின் அடிப்படை என்பதை உறுதியாக நம்பும் சகோதரர்களும் கூட பல விதமான பிரிவுகளுக்கு காரணிகளாக மாறிவிட்டதின் காரணம் என்ன ? இதை அறிந்து கொள்ள பெரிய ஆராய்சி தேவை இல்லை எதை தவறு என்று புரிந்து அசத்திய வழிகளில் இருந்து வெளியேறினோமோ அதே தவறை பெயர் மாற்றி நம்மில் குடி வைத்திருக்கும் வரை நிச்சயம் வழிகேடுகளே நம்மை துரத்தும் இயக்க பற்று என்பதை தாண்டி இயக்க வெறியும் தனி மனித பக்தியும் தனிமனித வெறுப்பும் பதவி மோகமும் பொருளாதார ஆசையும் தான் ஏகத்துவத்தை தழுவியுள்ள மக்களை இப்போதும் வழிகெடுத்து கொண்டுள்ளது எந்த சிந்தனைகள் ஏகத்துவ சிந்தனையுடைய மக்களை மிக எளிமையாக வழிகெடுக்குமோ அந்த சிந்தனைகளுக்கு ஊக்கம் தரும்