Posts

Showing posts from May, 2020

அல்லாஹீ அக்பர்

          ♥  அல்லாஹீ அக்பர் ♥                        →→→→→               கட்டுரை எண் 1332               J . Yaseen iMthadhi                        ************       ஒருவனின் ரசனை திறமை எந்தளவுக்கு அமைந்துள்ளதோ அந்த அளவுக்கு அவனது கண்டு பிடிப்புகளும் அழகானதாக அமையும் சமையல் கலையில் கைவந்த சமையல்காரி முதல் சாதனையை நோக்கி பயணம் செய்யும் சாணக்யன் வரை அவர்களின் கண்டு பிடிப்பும் இவ்வாறு தான் அமைந்திருக்கும் எந்த அறிவை வைத்து மனிதன் தனது திறமையை இந்தளவுக்கு வெளிப்படுத்துகின்றானோ அந்த அறிவை அற்புதமாக செதுக்கி அதற்குள் பல கலை வடிவங்களை அடுக்கி வைத்து எவ்வித முன்னுதாரணமும் மூலப்பொருளும் இல்லாது  குறைகளுக்கும் அப்பாற்பட்டு சர்வத்தையும் படைத்திட்ட படைப்பாளன் இறைவனின் படைப்பை பற்றி சிந்திப்போருக்கு இறைவனே மாசில்லாத கலைஞன் என்பதை விரிவாக புரிந்து கொள்ள முடியும் தூண் இன்றி தூக்கலாய் அமைந்துள்ள வானத்தின் உச்சியை  மொட்டை மாடியில் படுத்து கொண்டு சிந்திக்கும் ஒருவனுக்கு இறைவனின் ஆக்கம் அதிசயத்தின் உச்சாணியை உணர வைக்கும் மிளிரும் நட்சத்திரம் முதல் மிதந்து பயணிக்கும் மேகங்களில்  இறைவனின் வல்லம

சீமானின் தவறுகள்

            சீமானின் தவறுகள் :                [][][][][][][][][][][][][][][]                      17- 05-2020           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                      *********** மாற்று அரசியலை முன்னெடுப்போம் அதுவே நாட்டுக்கு தேவை என்று  களமிறங்கிய சீமான் மாற்று அரசியல்வாதிகளை போல்  தனது அரசியல் கட்சிக்கும் காலம் சென்ற ஒரு மனிதனை  இந்தியாவுக்கு நேரடி தொடர்பில்லாத ஒரு மனிதனை நம் நாட்டில் பிரதமராக இருந்த ஒருவரை படுகொலை செய்த ஒருவரை முஸ்லிம் சமூகத்தின் அதிருப்திக்கு உள்ளான ஒரு மனிதனை அதாவது ( இலங்கை பிரபாகரனை ) நாம் தமிழர் கட்சியின் ( தமிழ் இனத்தின்)  கதாநாயகனாக  மையப்படுத்தியது முதல் தவறு அரசியல் களத்தில் தனக்கு பின்னால் பல தரப்பட்ட மக்களும் இருக்கின்றார்கள் என்று தெரிந்து வைத்து கொண்டே அரசியலுக்கு நேரடி தொடர்பில்லாத வகையில் நமது முப்பாட்டன் முருகன் என்றும் தாய்மதம் திரும்புவோம் என்றும் அரசியல் புரட்சிக்கு வந்த மக்களை நோக்கி ஆன்மீகம் பேச துவங்கியதும்  அரசியல் மேடைகளில்  மதங்களை விமர்சனம் செய்ததும்  இரண்டாம் தவறு அதுவரை சீமானின் அரசியல் கருத்தை க

அரசியலும் முஸ்லிம்களும்

        கட்சிகளும் முஸ்லிம்களும்                 கட்டுரை எண் 1331               J . Yaseen iMthadhi                        ************ முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை ஏற்று நடத்தி செல்லும் அளவுக்கு  மார்க்க ரீதியில் இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை என்பது தான் உண்மை இதில் இந்த கட்சிக்கு பின்னால் போகாதீர்கள் அந்த கட்சிக்கு பின்னால் போகாதீர்கள் அந்த தலைவருக்கு பின்னால் போகாதீர்கள் இந்த தலைவருக்கு பின்னால் போகாதீர்கள் என்று ஒரு குறிப்பிட்ட கட்சியை  தலைமையை விதிவிலக்கு செய்து விட்டு  மற்ற கட்சிகளை இதர தலைவர்களை விமர்சனம் செய்வது என்பது அறியாமையின் வெளிப்பாடாகும் இந்தியாவில்  இருக்கும் மொத்த கட்சிகளும் நான்கு வகையில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது 1 மதம் சார்ந்த கட்சிகள் 2 இனம் சார்ந்த கட்சிகள் 3 மதத்தை விமர்சிக்கும் கட்சிகள் 4 மொழி சார்ந்த கட்சிகள் மனிதம் சார்ந்த கொள்கை  உடைய கட்சியை தவிர வேறு எந்த கட்சியையும் ஒரு முஸ்லிம் அரசியல் தலைமையாக இஸ்லாமிய மார்க்க ரீதியாக நிச்சயம் ஒப்புக்கொள்ளவே இயலாது இறைவனை  நம்பும் கட்சிகளை விட இறைவனை  திட்டும் கட்சிகளுக்கு  கொடி பிடிப்பதும் ஜால்ரா போட