Posts

Showing posts from October, 2025

நல்லடியார்கள் மகான்கள்

          நல்லடியார்கள் மகான்கள்                   ************************                   கட்டுரை எண்  1524                        ******************* மகான்களிடம் நேரடியாக துஆ செய்வதும்  அல்லது அவர்களின் பொருட்டால் துஆ செய்வதுமே மகான்களை மதிக்கும் முறையாகும் என்றால்  நபி ஆதம் (அலை) அவர்களுக்கு பின்னால் வந்த  நபி முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை  எந்த இறைத்தூதரும் அவ்வாறே பிரார்த்தனை செய்ய கற்றுக்கொடுத்திருப்பார்கள்  ஆனால் எந்த நபியும் பிரார்த்தனை செய்யும் பொழுது மகானின் பொருட்டாகவோ அல்லது நேரடியாகவோ அழைத்து பிரார்த்தனை செய்ததாக ஆதாரப்பூர்வமான ஒரு சான்றும் இல்லை  திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்றிலும் கூட அவ்வாறான வழிகாட்டல்கள் அல்லது நேரடியாகவோ மறைமுகமாகவோ  உத்தரவுகள் இல்லை  மகான்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வது அனுமதிக்கப்பட்டது என்றால்  இறந்து அடக்கம் செய்...

பறவை தரும் பாடம்

    பறவை தரும் வாழ்க்கை பாடம்                *********************** எங்கு வேண்டுமானாலும்  கூடு கட்டலாம்  பல எண்ணிக்கையிலும் கூடு கட்டலாம்  என்ற சுதந்திரம் இருந்தும் எந்த பறவைகளும்  பல கூடு கட்டுவதும் இல்லை பிற பறவைகளின் கூடுகளுக்கு உரிமை கொண்டாடுவதும் இல்லை அபகரிப்பதும் இல்லை  காரணம்  தேவைகளுக்கு ஏற்றே ஆசை கொள்ள வேண்டும் என்பது  பறவைகள் தரும் படிப்பினை  எந்த நாடு வேண்டுமானாலும் சுற்றித்திரியலாம்  எந்த பறவையுடன் பொழுதை கட்டுப்பாடும்  இன்றி கழிக்கலாம் என்ற தடையுமில்லாது தன்னைச்சார்ந்த பறவையுடன் மட்டுமே சுற்றித்திரியும் காரணம் தன்னை சார்ந்து வாழும் குடும்பத்தின் கண்காணிப்பும் பாதுகாப்புமே தனது கடமை என்ற உணர்ச்சியாகும் ஐந்தறிவு கொண்ட பறவைகளிடம் ஆறரிவு கொண்ட மனித சமூகம்  வாழ்க்கை பாடம் பயில வேண்டும்  தன்னை நம்பியுள்ள  குடும்பத்தை மறந்து  அல்லது ஒதுக்கியும் வாழும் கீழ்நிலை குணத்தை கலைய வேண்டும்   அலைபாயும் ஆசைகளை புறம் தள்ளி தேவைகளை கருத்தில் கொண்டே மனதை கட்டுப்பட...