தர்மசீலர்களை குறைத்து மதிப்பிடாதீர்
தர்மசீலர்களை உதாசீதனம் செய்யாதீர் ********************** கட்டுரை எண் 1512 ************* ரமலான் மாதத்தை முன்னிட்டு நன்மையை நாடி பகிரப்படும் தர்ம பொருட்களை பெறும் சிலர் அதை வாங்கும் போது மலர்ந்த முகத்துடனும் தர்மம் கொடுப்பவர் திரும்பிய பின் கொடுக்கப்பட்ட தர்மப்பொருளை அர்ப்பமாக பேசுவதையும் பரவலாக காண முடிகிறது பிறர் நலனில் அக்கரை கொண்டு கோரிக்கை வைக்காமலே தர்மம் கொடுப்பவர்களின் மனதை காயப்படுத்துவது நன்றி கெட்ட செயலாகும் 500 ரூபாய் மதிப்புள்ள தர்மப்பொருளை மனமுவந்து கொடுப்பவர்களை ஏளனமாக பேசுபவர்கள் அவர்களை போல் வாழ்நாளில் என்றாவது நாம் மனம் விரும்பி தர்மம் செய்துள்ளோமா என்று தனிமையில் சிந்திக்க வேண்டும் தர்மம் செய்பவர்களின் எண்ணத்தை காண வேண்டுமே ...