Posts

Showing posts from February, 2024

கோவில் இடிக்கப்பட்டதா

        கடவுள் பிறப்பு புருடாக்கள்                 ******************* ஏன் தற்காலத்தில் கடவுள் எவரும் பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் பிறப்பதில்லை அவதாரங்கள் எதுவும் ஏன் பள்ளிவாசல் கட்டப்பட்ட இடத்தில் ஜனிப்பதில்லை CCTV CAMERA மூலம் கவனிக்கப்பட்டு  அதன் உண்மைத்தன்மையை கண்டு பிடித்து விடுவார்கள் என்ற அச்சமா  ?  ஏன் கடவுளர்கள் எவரும்  பிரபஞ்சத்தின் வேறு கோள்களில் பிறக்கவில்லையா ? அவ்வாறு பிறந்திருந்தால் அங்கும் பள்ளிவாசல்கள் இருக்கும் இடத்தில் தான் பிறப்பார்களா  இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களின் பழமையான பள்ளிவாசல்களின் இடத்திலே தவிர வேறு எங்கும்  பிறக்க மாட்டோம் என்று கடவுளர்கள் சபதம்  செய்து விட்டனரா   ? ஐநூறு வருடங்களுக்கு முன் ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருந்த கோவில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் கட்டப்பட்டது என்று பரப்பும் கதைகளை தற்கால மக்களால் கண்டறிய முடியாது என்பதை அறிந்து கொண்டு துவேஷத்தை உருவாக்கிட மதவெறியர்களால்  கிளப்பி விடப்படும் அவதூறுகள் தானே தவிர இது  ஆதாரப்பூர்வமான தகவல்களும் அல்ல அறிவுப்பூர்வமான தகவல்களும் அல்ல சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு மனித மனங்களில்

காதல் திருமணம்

            வாழ்வை நாசமாக்கும்               காதல் திருமணங்கள்          **************************** ஐந்து வருடம் ஆனந்தமாக காதலித்து திருமணம் செய்பவர்கள் வாழ்நாளில் இரு வருடம் கூட  இணக்கமாக வாழ்வது இல்லை என்று புள்ளி விபரம் சொல்கிறது  காதலிக்கும் போது எளிதாக கடந்து செல்லும்  வார்த்தைகள் திருமண உறவுக்கு பின் இருவருக்கும் கடினமாக தென்படுகிறது  காதலிக்கும் போது காதலன் மீது அதிக உரிமை கொண்டாடும் காதலியின் ஆதிக்கம் திருமணத்திற்கு பிறகு பறிக்கப்படுவது போல் பிம்பம் ஏற்படுகிறது  ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற வரிகளுக்கு ஏற்று தனிப்பட்ட வாழ்வின் ஒழுக்கங்கள் திருமணத்திற்கு பின் இருவராலும் சந்தேகிக்கப்படுகிறது  அதீத கற்பனைகளும் இயல்புக்கு மாற்றமான இருவரின் சிந்தனைகளும் நடை முறை வாழ்வில் பொய்பித்து போகிறது  பெற்றோர்களால் முடிவு செய்யப்படும் திருமண பந்தத்தில் ஏற்படும் சிக்கல்களும் விவகாரங்களும் காதலித்து திருமணம் செய்வதால் ஏற்படாது என்ற குருட்டு நம்பிக்கையில் காதல் திருமணங்கள் விரைவில் முறிவை சந்திக்கிறது இன்னும் இது போல் பல காரணங்கள் காதல் திருமண முறிவுக்கு மூலமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது