லட்சியங்களை சிதைக்கும் எண்ணங்கள்
லட்சியத்தை சிதைக்கும் எண்ணங்கள் ★★★★★★★★★★★ வாழ்வில் சில எண்ணங்கள் பொன்னான உன் நேரங்களை விழுங்கிட துவங்கும் அதன் தேடலில் மறு முயற்சிகள் யாவும் உனக்கு கீழ்நிலையாக தோன்றும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் உன் செவிகளை முடமாக்கிவிடும் நுண்ணிய பார்வைகளையும் உன்னில் எளிதாக ஜடமாக்கிவிடும் எண்ணங்களை என்றாவது நீ அடைந்தாலும் சரி அல்லது அதன் பயணத்தில் இயலாமையை நீ அடைந்தாலும் சரி அல்லது தோல்வியை நீ சந்தித்தாலும் சரி இதற்காகவா எனது நேரங்களை நான் வீணடித்தேன் ? இதற்காகவா எனது லட்சியங்களை நான் புறம் தள்ளினேன் ? என்றே நீ வருந்தும் நிலை தோன்றும் காரணம் உலகில் எந்த தேடலிலும் நூறு சதவிகிதம் திருப்தியை எவராலும் அடைய முடியாது மனித மனம் மாறுதலை நோக்கியே பயணிக்கும் ...