துல்ஹஜ் பெருநாள் படிப்பினை இதுவே
இதுவே துல்ஹஜ் பெருநாள் படிப்பினை ! ***************** ! ஹிஜ்ரி 1444 = 2023 வருடம் ************** பால் குடி பருவமாக இருக்கும் நிலையில் இஸ்மாயீல் (அலை) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்கள் குர்பானி கொடுக்க முற்படவில்லை தவழும் பருவத்திலும் குர்பானி கொடுக்க முற்படவில்லை உன்னை பலி கொடுக்குமாறு இறைவன் கட்டளையிட்டுள்ளான் நீ அந்த தியாகத்திற்கு தயாரா என்று மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் தந்தை நபி இப்ராஹீம் ( அலை) அவர்கள் கேட்கும் பருவத்தில் தான் குர்பானி கொடுக்கவே முன் வந்தார்கள் அப்படியானால் இங்கு தியாகத்தில் முன்னனியில் இருப்பவர் தந்தை இப்ராஹீம் (அலை ) அவர்களா ? அல்லது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களா ? இறைவன் என்றால் யார் அவனது சொல்லுக்கு எந்தளவுக்கு கட்டுப்பட வேண்டும் ? என்பதை சிறு பருவத்தில் ஊட்டி வளர்த்தியதின் காரணமாகவே இறைவனின் கட்டளை என்று சொன்னவுடன் அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் எவ்வித சலனமும் மறுப்பும் இன்றி தன்னை பலியிட சம்மதித்தார்கள் அந்த தியாகத்தை மெச்சும் விதமாக குர்பானி என்ற நடைமுறையை