Posts

Showing posts from April, 2023

வாலிபனே உனக்கான அறிவுரை

        வாலிபனுக்கு ஓர் அறிவுரை                    **************** வாலிபத்தில் ஒரு மனிதன்  எதை தேர்வு செய்கிறானோ  அதை நோக்கியே அவனது வாழ்கை பயணம் அமையும் என்பதை இளைஞர்கள் உள்வாங்க வேண்டும்  வாழ்வில் சில தேர்வுகளை எளிதாக மாற்றி கொள்ள இயலும் சில தேர்வுகளை மாற்றி கொள்ள  ஆசை பட்டாலும் நடைமுறையில் கொண்டு வர பல சிக்கல்களை  தர்ம சங்கடங்களை எதிர் கொள்ளும் சூழ்நிலை நிச்சயம்  ஏற்படும் சில மாற்றங்களை உருவாக்குவது கானல் நீராகவே மாறி விடும் அதில் ஒன்றே மணவாழ்வு  யாரை திருமணம் செய்வது எப்போது திருமணம் செய்வது எந்த இடத்தில் திருமணம் செய்வது எந்த குடும்பத்தில் திருமணம் செய்வது எந்த நோக்கத்திற்கு திருமணம் செய்வது என்பது அவைகளில் மூலமான ஒன்று  முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற வாசகம் இதற்கே சரியாக பொருந்தும்  திருமணம் செய்த பின் இதை சீர் செய்து கொள்ளலாம்  திருமணம் செய்த பின் அதை சீர் செய்து கொள்ளலாம்  என்று கருதி இல்லறத்தில் நுழையும் வாலிபன்  அவனது கற்பனைகளுடன் அதிகமாக சண்டையிட நேரிடும்  நிஜ வாழ்வில் தோல்விகளே  தொடர் கதையாகி விடும் உலவியல் நோய்களே சேகரிப்பாக  மாறி விடும்  வாலிப முறுக்கமும் வேகமும் சிந்

பெருநாட்கள் புனிதத்தை சீரழிக்கும் இசை

        பெருநாள் கண்ணியத்தை                சீரழிக்கு கலாச்சாரம்   ஜமாஅத்துல் உலமா சபை கோழையா                   ****************** திருவிழா என்றாலே இசை மேள தாளம் என்பது மாற்றார் கலாச்சாரம் அதற்கு சற்றும் குறையாது முஸ்லிம் சமூகத்தின் புனித பெருநாட்களும் சீரழிக்கப்பட்டு  வருகிறது  ரமழான் 27 இரவு கழிந்து விட்டாலே  வீதி தோறும் பெருநாட்களை வரவேற்கும் விதமாக சாத்தான் இசையின் ஒசைகள் தான் செவிகளை பிளக்கிறது பெருநாள் தக்பீர்களை விட சாத்தான்களின் இசையுடன் கூடிய பாடல்களின் ஓசைகள் தான் வீதி முழுவதும் ஒழிக்கிறது  சமீப காலமாக திரைப்பட பாடல்கள் காதல் பாடல்கள் காமபாடல்கள் சர்வ சாதாரணமாக ஒளிபரப்பபடுகிறது ஓரளவு பித்அத்துகளை எதிர்க்கும் கண்ணியமிகு  உலமாக்கள் கூட இந்த வழிகேடுகளை பெருநாள் உரைகளில் கண்டனம் தெரிவிப்பது இல்லை  மார்க்கத்தை பற்றிய அறிவு ஞானம் இல்லாது பள்ளிவாசல் நிர்வாகிகள் அரங்கேற்றம் செய்யும் பித்அத்துகளுக்கு உலமாக்களே காரணம் என்ற குற்றச்சாட்டை இனியும் எத்தனை காலம் உலமாக்களே   நீங்கள் சுமப்பீர்கள்  கோழைத்தனத்தை கைவிடுங்கள் இவ்விசயத்தில் நாங்கள் கோழைகள்  இல்லை என்று வாதிட்டால்  ஜமாஅத்துல் உலமா ச

பத்ரு போர் புரளிகள்

                 பத்ரு போர் புரளிகள்                        *************                   கட்டுரை எண் 1155                        *********** இஸ்லாமிய எதிரிகளை பழி தீர்க்கவும் பத்ரு போர் நடைபெறவில்லை  இஸ்லாத்தை பரப்பவும்  பத்ரு போர் நடைபெறவில்லை இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கும் பத்ரு போர் நடைபெறவில்லை  இம்மூன்று  காரணங்களுக்காகவும்  யுத்தம் செய்யுங்கள் என்றும் திருக்குர்ஆன் போதிக்கவில்லை  இதை உணராது பத்ருபோர் பற்றிய  செய்திகளில் மேற்கூறப்பட்ட  காரணத்தையே மையமாக வைத்து  சில முஸ்லிம்கள் செய்திகளை பரப்புவதை  காண முடிகிறது மார்க்க ஞானம் இல்லாத நிலையில் மார்க்க அறிஞர்களை போல் தன்னை கருதி கொண்டு மார்க்க விசயங்களை தவறாக பரப்பும் போக்கு தற்போது சமூகவலைதளத்தில் அதிகரித்துள்ளது  மக்கா வாழ்கையில்  சோதனைகளை  அனுபவித்து பொறுமையாக இருந்த நிலையிலும்  அப்பகுதியில்  இருந்த இஸ்லாமிய எதிரிகள் நபித்தோழர்களையும் நபிகளாரையும் மக்காவை விட்டே துரத்துகின்றனர் இந்நிலையில் வேறு வழியில்லாது மக்காவை நோக்கி பயணம் செய்து அமைதியான வாழ்க்கையை அகதிகளாக மக்காவில் கழித்து கொண்டிருந்தனர் மக்காவில் இருந்து நபிகளாரையும் அவ