வெட்கம்
வெட்கமே உயரிய பண்பு √√√√√√√√√√√√√√ J . யாஸீன் இம்தாதி ********** ஒரு மனிதன் வளரும் பருவத்தில் எதை வழமையாக்கி கொள்கிறானோ அதை பகிரங்கமாக செய்யவும் தயங்க மாட்டான் அது உயரிய செயலாக இருப்பினும் சரி கீழ்த்தரமான செயலாக இருப்பினும் சரி அங்கங்களை வெளிகாட்டி திரியும் பெண்களுக்கு மத்தியில் பனியன் அணியாமல் செல்வதை கூட அசிங்கமாக கருதும் ஆடவன் உண்டு மதுபானத்தை நடுரோட்டில் அருந்தி திரியும் மனிதர்களுக்கு இடையில் உணவுகளை பகிரங்கமாக உண்ணுவதற்கு கூட கூச்சப்படும் மனிதர்களும் உண்டு தீய வார்த்தைகளை பச்சையாக பேசி திரியும் மனிதனுக்கு இடையில் நல்ல வார்த்தைகளை பேசுவதற்கு கூட தயக்கப்படும் மனிதர்களும் உண்டு சுருங்க சொன்னால் வெட்கம் எனும் தன்மை எந்தளவு ஒரு மனிதனிடம் இடம் பெற்றுள்ளதோ அந்தளவுக்கு அம்மனிதனின் வாழ்வு தனிமையிலும் வெளிரங்கத்திலும் தூய்மையாக அமைந்திருக்கும் அதனால் தான் வெட்கம் எனும் தன்மையை இஸ்லாம் அதிகமாக போதிக்கிறது ஈமானில் ஒரு பகுதியாக இஸ்லாம் வெட்கத்தை அறிமுகம் செய்கிறது கன்னிப்பெண்ணிடம் இருக்க வேண்டிய வெட்கத்தை விட கூடுதலாக வெ