Posts

Showing posts from May, 2022

CCTV CAMERA

                       CCTV CAMERA                             ******** கண் பார்வை முன் முதலாளி இல்லை என்றாலும் முதலாளி முன்னேற்பாடு செய்த CCTV CAMERA மூலம் எந்நேரமும் கண்காணிப்பு நடைபெறுகிறது என்ற காரணத்தால் தவறுகளில் இருந்து தன்னை  தவிர்த்து கொள்ளும் மனிதன்  தன்னை படைத்த இறைவன் எந்நேரமும் கண்காணிக்கும் வல்லமை பெறவில்லை என்பதை போல் நடப்பதை  விட அறிவீன செயல் இருக்க இயலாது  மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால்  மின் பாயும் கம்பி துண்டிக்கப்பட்டால் தன்னை அடையாளம் தெரியாத வகையில் மூடி கொண்டால்  CCTV CAMERA பழுதானால் முதலாளிக்கும் கூட கண்டு பிடிக்கும் வாய்ப்பு இல்லை என்று மனிதனின் பலவீனத்தை அறிந்த மனிதன்  இறைவனின் கண்காணிப்பையும் மனிதனின் கண்டு பிடித்த கருவியை  போன்று கருதினால் அவனை விட சிந்தனை குறைந்தவன் எவனும் இல்லை  கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் சாதனங்களை கண்டறியப்படும் இறைவனின் படைப்புகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதுவே மனிதனின் அறிவை முடக்கி விடுகிறது வழிகேட்டின் வாசல்களை திறந்து விடுகிறது  وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ  وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَب

இறையில்லங்களின் சாபம்

         இறையில்லங்களின் சாபம்                             நிச்சயம்                      *****************               J . யாஸீன் இம்தாதி                              ******** முஸ்லிம்களின் வழிபாட்டு தளத்தை இடிப்பதாக இருந்தாலும் அல்லது அநீதமாக பறிப்பதாக இருந்தாலும் நீதிமன்றங்களை நாடினால் போதும் என்ற இழிநிலை தான் சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது  சொந்தமாக சம்பாரித்த பணத்தில் இருந்து கூட ரமழான் மாதத்தில் இறைவனின் கட்டளைக்கு இணங்க பகல் காலங்களில்  உண்ணுவதையே வெறுத்து பயிற்சி பெற்றுள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு அடுத்தவர்களின் பொருளாதாரத்தால் எழுப்பப்பட்ட பிற  சமுதாயத்தின் வழிபாட்டுதளத்தை அபகரிக்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ எப்படி அனுமதி இருக்கும் ? ,அதை எப்படி முஸ்லிம் சமுதாயம் செய்வார்கள்  என்ற சாதாரண பகுத்துணர்வு கூட நீதிபதிகளுக்கு இல்லாதது வெட்க கேடாகும்  நீதிமன்றங்களை இது போன்ற விசயங்களில் நம்புவது பயன் இல்லை என்ற எண்ணத்தை நெடுங்காலமாக நீதிபதிகளே விதைப்பது தான் விந்தையாக உள்ளது  முகலாய மன்னர் பாபர் ராமருக்கு எழுப்பப்பட்ட கோயிலை இடிக்கவும் இல்லை அதற்கு சரியான ஆதாரமும் இல்