Posts

Showing posts from February, 2020

இலங்கை அகதிகள்

            இலங்கையை சார்ந்த                   சகோதரத்துவ          இந்து மத அகதிகளுக்கு             குடியுரிமை கொடுப்பீர்                    *************       20-02-2020 கட்டுரை எண் 1316              J . Yaseen iMthadhi                         ********** இலங்கை போரின் போது அங்கிருக்கும் பல அப்பாவி தமிழர்கள்  போருக்கு பயந்து உயிருக்காக  அடைக்கலம் தேடி இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் தமிழகத்தில் கிட்டதட்ட 148 அகதிமுகாம்கள் அவர்களுக்காகவே செயல்பட்டு கொண்டுள்ளது ஒரு இலட்சத்திற்கும் மேல்  எண்ணிக்கையில் இலங்கை அகதிகள் தமிழகத்தில் உள்ளனர் அந்த அகதிகளில் 98 சதவிகித மக்களும் நமது சகோதரத்துவ சமுதாயமான  இந்து சமூகத்தை சார்ந்த அப்பாவிகள் தான் பல வருடங்களுக்கு முன் அகதியாக வருகை தந்த பல இந்து சமுதாய  பெண்கள் இந்தியாவில் வந்த பின்பு தான் திருமணமும் செய்து  குழந்தைகளை ஈன்று சிலர்கள் பேரக்குழந்தைகளையும் பெற்ற வயதில் உள்ளனர் அவர்களின் பிள்ளைகள் இந்தியாவில் பிறந்து இந்தியாவில் படித்து இந்தியாவில்  வேலை பார்த்தாலும் அவர்களின் தாய் இலங்கை நாட்டு அகதி என்ற ஒரே காரணத்திற்காக இவர்களும் பல வருடம்

திண்டுக்கல் சீனிவாசன்

                 யார் குற்றவாளி             [][][][][][][][][][][][][][][][][]           J . Yaseen iMthadhi     Bismillahir Rahmanir Raheem                      •••••••••••••••••             கட்டுரை எண் 131 4                         ******** காசு கொடுத்தால்  தன்மானத்தையே இழக்கும் பிறவிகளுக்கு பரிந்து  பேசுவதோ இரக்கப்படுவதோ  நம்மை பொருத்தவரை அவசியமற்றது சிறுவனை கால்களில் அணிந்த காலணிகளை கழட்டுவதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அழைத்ததை சிறுவனின்  பெற்றோர்கள் பெரும் தன்மையோடு  மன்னித்தால் அது பெற்றோரின் தனி சிறப்பாக பேசலாம் ஆனால் மகனை இழிவு படுத்தியதாக பேட்டி கொடுத்த தாயே இழிவு படுத்தியதாக கூறப்படும்  அமைச்சரிடம் உதவிகளை வாங்கி கொண்டு எல்லாம் இப்போது சரியாகி விட்டது எனவே இதை பெரிது படுத்த வேண்டாம் என்று அந்த சிறுவனின் தன்மானத்திகு குரல் கொடுத்த மக்களை மட்டப்படுத்தியது தான் குரல் கொடுத்த மக்களை இழிவு படுத்திய செயலாகும் தன்னை உயர்ந்த ஜாதியாக கருதுபவனை கம்பால் அடிப்பது சரி என்றால் தன்னை தாழ்ந்த ஜாதியாக கருதிய நபரிடமே உதவிகளை வாங்கிய  தாயை எதை  கொண்டு அடிப்பது என்றே சிந்திக்க