அவ்லியா தொடர் பாகம் இரண்டு
மகான்களை மட்டப்படுத்தும் ஞானசூனியங்கள் ***************************** பாகம் இரண்டு கட்டுரை எண் 1542 ***************** நல்லடியார்கள் மதிக்கத்தக்கவர்கள் இறையன்பை பெற்றவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை நல்லடியார்கள் என்பவர்கள் யார் தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே நல்லடியார்களா ? ஏன் உயிருடன் வாழும் ஒரு நல்லடியாரையும் மகான் அவ்லியா என்று முஸ்லிம்கள் குறிப்பிடுவது இல்லை ஏன் உயிருடன் வாழும் ஒரு நல்லடியாரையும் முஸ்லிம்கள் தேடிச்சென்று நேர்சை செய்வது இல்லை ஏன் உயிருடன் வாழும் ஒரு நல்லடியாரையும் தேடிச்சென்று பிரார்த்தனை செய்வது இல்லை ? ஏன் உயிருடன் வாழும் ஒரு நல்லடியாருக்காகவும் விழாக்கள் கொண்டாடுவது இல்லை நல்லடியார்கள் என்றாலே தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குர்ஆன் சுன்னாவில் குறிப்பிடப்பட...