தராசின் கல்லா முள்ளா
நீங்கள் தராசின் கல்லா அல்லது தராசின் முள்ளா ****************** கட்டுரை எண் 1519 ************* மார்க்கத்தின் மீதுள்ள பற்று முஸ்லிமின் உள்ளத்தில் எந்தளவுக்கு ஆழமாக பதிவாயிருக்குதோ அந்தளவுக்கே அவன் நேர்வழியில் பயணிப்பான் அதே போல் ஒரு அறிஞர் மீதும் அல்லது இயக்கத்தின் மீதும் குருட்டு பக்தியும் அல்லது வெறுப்பும் எந்தளவுக்கு ஆழமாக பதிவாயிருக்குதோ அந்தளவுக்கு அவனிடம் அறியாமையும் முரண்பாடும் விரக்தியும் உளரல்களும் புலம்பல்களும் குடி கொண்டிருக்கும் இதில் விதிவிலக்கு பெற்றவர்கள் எவரும் இருக்க முடியாது சமூகவலைத்தளத்தில் பதிவிடும் பலரும் உலமாக்களில் சிலரும் இந்நிலையில் இருப்பதை பல வருடங்களாக அனுபவத்தில் பார்த்து வருகிறோம் இயக்கத்தை கடுமையாக சாடுபவர்களும் அல்ல...