அஞ்ஞானிகளால் ஈமானிய ஆபத்து
குட்டையை கிளப்பும் அஞ்ஞானிகள் ********************* கட்டுரை எண் 1515 *********** இஸ்லாம் இதை ஏன் தடை செய்துள்ளது ? அதை ஏன் தடை செய்துள்ளது தெரியுமா ? என்று அதன் காரணங்களை விளக்குவதற்கு முற்பட்ட சில அஞ்ஞானிகளால் ஏற்படுத்தப்பட்ட சமூக சர்ச்சைகளே ஏராளம் கரையை நோக்கி பயணிப்பதை விட நடுக்கடல் வரை சென்று மீளமுடியாது தத்தளிப்பதே முஸ்லிம்களின் வாடிக்கையாகி போனது முஸ்லிம் அல்லாத பிறர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு பணியை மேற்கொள்ளும் போது அஞ்ஞானிகளால் இஸ்லாத்தின் பெயரில் நுழைக்கப்பட்ட அவசியமற்ற சர்ச்சைகளுக்கு விளக்கம் தருவதே முதல் பணியாக மாறி விட்டது இறைவனும் இறைத்தூதர் ( ஸல் ) அவர்களும் கற்பித்து தராத காரணங்களை மார்க்கத்தின் பெயரில் விளக்கி கொண்டிருப்பது முஸ்லிம்களின் அழைப்பு பணியும் அல்ல சமூகவலைத்தளத்தில் மாணவர்களாக வலம் வருபவர்களை விட அறிஞர்களாக மேதாவிகளாக தங்களை காட்டிக்கொள்பவர்களே பெருகி விட்டனர் இஸ்லாம் கற்பிக்கும் ஒவ்வொரு விசயத்திற்கும் சுய விளக்கத்தை கற்பித்து கொண்டிருந்தால் அதன் மூலம் ஏற்படும் பயனை விட எதிரிகளின் விமர்சனங்கள