உளவியல் நோயின் அச்சாணி
பார்வையே உளவியல் நோயின் அச்சாணி ***************************** கட்டுரை எண் 1153 -------------------- மனிதனின் பார்வை தான் அநேகமான உளவியல் நோய்களுக்கு மூல காரணமாக அமைந்துள்ளது பார்வையில்லாதவனிடம் சென்று உன்னுடைய உச்ச கட்ட ஆசை என்ன என கேட்டால் நானும் பிற மனிதனை போல் உலகை காண வேண்டும் என்றே கூறுவான் பார்வையற்றவனுக்கு பொன் பெண் பொருள் எதுவும் மனதை நாசமாக்காது தனது உருவத்தை பார்க்காதவனுக்கு இருளும் ஒளியும் சமமே கண் இல்லாதவன் உலக மோகம் பிடித்து அலைவதில்லை இதை உணர்ந்தால் கண்களே அனைத்திற்கும் மூல காரணம் என்பதை உணர முடியும் இதனால் தான் பார்வையின் கோணத்தையும் மறுமையில் விசாரிப்பதாக இறைவன் கூறுகிறான் கண் பார்வை இல்லாதவன் சகித்து கொண்டால் உயரிய சுவனத்தை பரிசாக தருவதாகவும் இறைதூதர் மூலம் வாக்களிக்கிறான் وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம் நிச்சயமாக (மற