இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா
இந்துத்துவா துஷ்பிரச்சாரம்
வெளுத்து போனது
++++++++++
Bismillahir Rahmanir Raheem
********
கட்டுரை எண் 1423
*********
கடந்த காலங்களில் இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாத்தை வாள் கொண்டு பரப்பினார்கள் என்ற கடைந்தெடுத்த பொய்யை தொடர்ந்து பரப்பி கொண்டும் அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் மீது பிற மக்கள் உள்ளத்தில் வெறுப்புணர்வையும் திட்டமிட்டு ஏற்படுத்தி கொண்டிருந்தனர்
இதை பல அப்பாவிகளும் இன்று வரை உண்மை என்று நம்பி வந்தனர்
காரணம் தற்போது வாழும் எவரும் கடந்த காலத்தில் வாழாத காரணத்தில் முஸ்லிம் மன்னர்கள் பெயரில் புனையப்பட்ட கதைகளையும் சூழ்ச்சிகளையும் உண்மை என்று நம்பி வந்தனர்
தற்போது 22-09-2021 bbc தமிழ் நியூஸ் அறிக்கையில் கடந்த அறுபது ஆண்டுகளில் இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி நான்கு சதவிகிதம் அதிகரித்து
அதே சதவிகிதம் இந்து சமூகம் அமைப்பில் குறைந்துள்ளதாக தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர்
இதை படிக்கும் மக்களே
சிந்தியுங்கள்
தற்போது இந்தியாவை ஆள்வது யார் ?
அதிகார வர்க்கத்தில் இந்தியாவில் முஸ்லிம் சமுதாயத்தின் சதவிகிதம் எத்தனை ?
முஸ்லிம் சமுதாயத்தவர்கள் மாற்று மதத்தவர்களை அழைத்து நடத்தி வரும் இஸ்லாமிய நிகழ்சிகள் எத்தனை ?
இந்துக்களை இஸ்லாத்தின் பக்கம் கவர்ந்து இழுப்பதற்கு கடந்த அறுபது ஆண்டுகளில் முஸ்லிம் சமூகம் வாரி இரைத்த கோடிகள் எத்தனை ?
இந்து சமூகத்தை மிரட்டி இஸ்லாத்தின் பக்கம் இணைக்க முஸ்லிம் சமூகம் நடத்திய சண்டைகள் அல்லது போர்கள் எத்தனை ?
என்றெல்லாம் நடுநிலையோடு சிந்திக்கும் மக்களுக்கு முகலாய மன்னர்களும் இஸ்லாத்தை வாள் கொண்டு பரப்பி இருக்க சாத்தியம் இல்லை என்பதையும் தற்காலத்தில் இஸ்லாம் எப்படி மாற்றார்களை ஈர்த்து வருகிறது என்பதையும் உணருவதுடன்
இந்துத்துவவாதிகள் தொடர்ந்து இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக அவதூறு பிரச்சாரத்தை தான் செய்து கொண்டுள்ளனர் என்பதை ஆணித்தரமாக அறிய இயலும்
இஸ்லாம் வாளால் பரப்படவில்லை
மாறாக அதன் அறிவுப்பூர்வமான கொள்கையாலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான செயல்களாலும் மனிதாபிமான அறவுரை மற்றும் அதன் பணிகளாலும் தான் பிற சமூகத்தின் இதயங்களை இஸ்லாம் ஈர்த்து வருகிறது
இஸ்லாத்தை விளங்காமல் இருப்போரை
இஸ்லாத்தை வெறுப்புணர்வுடன் பார்ப்போரை
இஸ்லாம் மனித சமூகத்திற்கு எதிரானது என்று நினைப்போரை
இஸ்லாத்தை நிர்பந்தத்திற்காக ஏற்று கொள்வோரை
இஸ்லாமே அங்கீகரிக்காது என்பதை இப்போதும் அழுத்தமாக கூறுகிறோம்
இஸ்லாத்தை சரியாக புரிந்தோர் விரும்பினால் இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்
அல்லது இஸ்லாத்தை புறக்கணியுங்கள் அதனால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்த ஒரு இழப்பும் இல்லை
وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ فَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا
(நபியே!)நீர் கூறுவீராக இந்தச் சத்திய (வேதம் எனும் இஸ்லாம் ) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது
ஆகவே, விரும்புபவர் (அதனை) எற்று கொள்ளட்டும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும்
அநியாயக்காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்
அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள் (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும் மிகக் கேடான பானமாகும் அது!
இன்னும் வாழும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்
(அல்குர்ஆன் : 18:29)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment