நபித்தோழர்களும் நம் தோழர்களும்

நபித்தோழர்களும்
             நம் தோழர்களும்

                   []=[]=[]=[]=[]=[]
       J . யாஸீன் இம்தாதி
                  ••••••••••
                         بسم الله الرحمن الرحيم
                   •••••••••

தெளிவாக அறிந்துள்ள இஸ்லாமிய சட்டங்களில் எதை நாம் செய்யவில்லை  ?

எவ்வாறு அதை நிறைவேற்ற வேண்டும் என்ற மனப்பக்குவமே  நபித்தோழர்களிடம் அதிகம் நிறைந்திருந்தது 

அதுவே அவர்களின் ஈமானை வலுப்படுத்தியது ஜொலிக்க வைத்தது 

தற்காலத்தில் எதை பற்றிய ஞானம் அறவே இல்லையோ எதை பற்றிய பார்வை மக்களை குழப்பத்தில் இழுத்து செல்லுமோ அது தொடர்பான விடயங்களில் தான் மார்க்க அறிஞர்களை போல் விவாதிப்பதிலும் 
இதுநாள் வரை நடைமுறையில் இருக்கும் பல நல்ல  வழிமுறைகளை புறம்தள்ளுவதிலும் தான் அதிகமான ஈடுபாடு நம் தோழர்களிடம்  இருந்து வருகிறது 


ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை பேசுவதை விட ஆதாரமற்ற ஹதீஸ்களை அல்லது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை எவ்வாறு தள்ளுபடி செய்வது என்ற வீண் விவாதங்களில் மக்களின் நேரத்தை சாத்தான் சாதுர்யமாக கழிக்க  வைக்கிறான் 

தவறான வழியில் இருப்போரை அதன் வழியில் மீண்டும் இழுத்து செல்வதை  விட நேரிய சிந்தனை பக்கம் வந்தவர்களை தான் 
சாத்தான் பல வகைகளில் வழி மாறிட செய்வான் என்பதை உணருங்கள் 

ஞானம் இல்லாத விவாதங்களில் தலையிட்டு மறுமை வாழ்வை நாசமாக்கி விட வேண்டாம் 



وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌  اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْــٴُـوْلًا‏

எதைப்பற்றி உமக்கு(தீர்க்கமான) ஞானமில்லையோ அதை( செய்ய) தொடரவேண்டாம்
நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும் பார்வையும் இருதயமும் இவை ஒவ்வொன்றும் கேள்வி கேட்கப்படும்

        (அல்குர்ஆன் : 17:36)



        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்