ஏணிப்படிகள்
ஏணிப்படிகள்
[]=[]=[]=[]=[]=[]=[]
J . யாஸீன் இம்தாதி
••••••••••
بسم الله الرحمن الرحيم
•••••••••
சிலரது வெற்றி பலரது தோல்விக்கு காரணம்
பலரது தோல்வி சிலரது வெற்றிக்கு காரணம்
ஒருவரின் மகிழ்சி சில நேரம் பிறருக்கு துக்கத்தை தரலாம்
சிலரது துக்கமும் பலருக்கு அந்நேரம் மகிழ்வை தரலாம்
ஒருவனின் வெற்றிக்கும் தோல்விக்கும் மகிழ்வுக்கும் துக்கத்திற்கும் எது காரணம் என்று சிந்திப்பதை தவிர்த்து விட்டு
நம் தோல்விக்கும் துக்கத்திற்கும் யார் காரணம் அவனை என்ன செய்வது என்றே எப்போதும் சிந்திக்க முனைந்தால் லட்சியங்களின் பாதையில் இருந்து திசை திரும்பி விடுவோம்
இதுவும் கூட நம் வாழ்வின் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் மகிழ்வை அதிகமாக்கும்
அதுவே நம் மனதின் வலியை ரணமாக்கும்
இந்நிலையை தூசி போல் உதறி விட்டு வாழ்வின் எதார்தத்தை நோக்கி பயணிப்போம்
அதுவே மனித வாழ்கையின் ஏணிப்படிகள்
عَنِ الْحَسَنِؒ يَقُوْلُ: بَلَغَنَا اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: رَحِمَ اللهُ عَبْدًا تَكَلَّمَ فَغَنِمَ اَوْ سَكَتَ فَسَلِمَ
நல்ல பேச்சுக்களைப் பேசி இம்மை, மறுமையில் அதன் பலனை அடைகின்ற
அல்லது மௌனமாக இருந்து, நாவின் கெடுதிகளைவிட்டு தன்னைத் தற்காத்து கொள்ளும் அடியான் மீது அல்லாஹுதஆலா அருள் புரிவானாக என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் எங்களுக்குக் கிடைத்துள்ளது' என ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் பைஹகி
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment