குற்றப்பார்வை

                 குற்றப்பார்வை

                     [][][][][][][][][][]
              கட்டுரை எண் 1332
                        ********
                     17-06-2020
          J . Yaseen iMthadhi
    Bismillahir Rahmanir Raheem
          
                       ************
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

குற்றம் என்றால் என்ன

பிறர்கள் விரும்பாத ஒன்றை செய்வது குற்றமா

பிறர்கள் வெறுக்கும் ஒன்றை செய்வது குற்றமா

பிறர்களுக்கு தீங்கு தரும் ஒன்றை செய்வது குற்றமா

இதில் எது குற்றம்  ?

ஒரு மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட செயல் மறு மாநிலத்தில் செய்வது குற்றமாக தண்டிக்கப்படுவது ஏன்

ஒரு நாட்டில் அனுமதிக்கப்பட்ட செயல் மறு நாட்டில்  குற்றமாக கூண்டில் நிறுத்தப்படுவது ஏன்

குற்றத்திற்கான குறுக்கு வழியை தண்டிக்காத நீதிமன்றங்கள்
அதன் நேர் வழியை மட்டும் ஏன் குற்றவழியாக தீர்ப்பு வழங்குகிறது

குற்றத்திற்கு மனிதர்களின்  குற்றப்பார்வையே இதன் வேறுபாடுகளுக்கு அடிப்படை காரணம்

குற்றத்தை குற்றமே இல்லாமல் நேர் பாதையில்  பார்த்து நீதி வழங்கும் ஒரே நாயன் இறைவன் மட்டுமே

குற்றத்திற்கு குற்றப்பார்வையை கூட குற்றமாக பார்க்கும் ஒரே நாயன் இறைவன் மட்டுமே

இறைவன் பார்வையில் எது குற்றமோ அதை யார் செய்தாலும் குற்றமே

எந்த நாட்டுக்காரன் செய்தாலும் குற்றமே

எந்த மொழிக்காரன் செய்தாலும் குற்றமே

பாவத்தை செய்யும் அடிமையும் அதே பாவத்தை செய்யும்  ஆட்சியாளனும்  இறைவன் பார்வையில் ஒரே தர  குற்றவாளியே

அதிகாரம் உள்ளவன் தனது வலிமையை காட்டியும் இறைவனிடம் மறுமையில்  தப்பிக்க இயலாது

அதிகாரம் இல்லாதவன் தனது பலவீனத்தை காட்டியும் இறைவனிடம் மறுமையில் தனது குற்றத்தை மூடி மறைக்க இயலாது

நிர்பந்தம் என்ற சூழ்நிலையை தவிர வேறு எவ்வகை குற்றமும் திட்டமாக இறைவன் பார்வையில் தண்டிக்கப்படும்  குற்றமே

இதை உணர்ந்தால் குற்றமும் கூட குற்றவாளியின் இதயத்தில் இடம் பிடிக்க தடுமாறும்

அந்த சூழ்நிலையால் தீய மனிதனின் நிலை கூட நேர்மையான பாதை நோக்கி நிலையாகும்

بَلٰى مَنْ كَسَبَ سَيِّئَةً وَّاَحَاطَتْ بِهٖ خَطِيْۤئَتُهٗ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ 

அப்படியல்ல! எவர் தீமையைச் சம்பாதித்து அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ அத்தகையோர் நரகவாசிகளே அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்

             (அல்குர்ஆன் : 2:81)

اِنَّ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا يَدْخُلُوْنَ الْجَـنَّةَ حَتّٰى يَلِجَ الْجَمَلُ فِىْ سَمِّ الْخِيَاطِ‌  وَكَذٰلِكَ نَجْزِى الْمُجْرِمِيْنَ‏ 

எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா  மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள்  இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்

           (அல்குர்ஆன் : 7:40)

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்