கொரானா முன்னெச்சரிக்கை
கொரானாவும் முஸ்லிம்களின்
முன்னெச்சரிக்கையும்
[][][][][][][][][][][][][][][]
22-03-2020 கட்டுரை எண் 1324
J . Yaseen iMthadhi
***********
தெர்மல் ஸ்கேன் மூலம் வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டிற்கு திரும்பும் மக்களை பரிசோதிக்கப்படும் கருவியின் மூலம்
அந்த நபரின் உடல் டெம்பரேசரை மட்டுமே கண்டறிய உதவும்
அவ்வாறு ஸ்கேன் செய்யும் போது டெம்பரேசர் கூடுதலாக இருக்கும் நபர்களை மாத்திரம் அவர்களின் வீடுகளுக்கு உடடியாக அனுப்பாமல் நேரடியாக கொரானா சிகிச்சைக்கு அரசு அனுப்பி வைக்கும்
பரிசோதிக்கும் போது நார்மல் நிலையில் உடலின் டெம்பரேசர் இருந்தால் உரியவரின் தொடர்பு எண் பெற்று அவர்களை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்
அதன் பிறகு 14 நாட்கள் தொடர்ந்து கொரானாவின் தாக்கம் ஏதாவது உடலில் தென்படுகிறதா என்று தொடர்பு எண் மூலம் விசாரிப்பார்கள்
இந்நேரத்தில் சம்மந்தப்பட்ட நபர் அவருக்கு ஏற்பட்டுள்ள நோயை மூடி மறைத்தாலோ அல்லது வேறு பல காரணங்களுக்கு ஒத்துழைக்காமல் இருந்தாலோ அவர் மூலமாகத்தான் கொரானா தொற்று நோய் நாட்டு மக்களுக்கு பரவுகிறது
அதிலும் குறிப்பாக அவரையே நம்பி வாழும் அவரது மனைவி மக்களுக்கு மிக வேகமாக தொற்றி கொள்கிறது
யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்ற பழமொழியை போல் யாம் பெற்ற துன்பம் இவ்வையகமும் பெற கூடாது என்ற நல்லெண்ணம் வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டிற்கு வருகை தரும் நபர்களுக்கு இருக்க வேண்டும்
குறிப்பாக பிறர் நலம் பேணுவதை கடமையாக்கிய இஸ்லாத்தை நம்பும் முஸ்லிம்கள் இவ்விசயத்தில் மிகவும் கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருக்குமாறு முஸ்லிம் சமூகத்தின் சார்பாக கேட்டு கொள்கிறேன்
இது யாவற்றிற்கும் மேலாக இறைவனின் நாட்டம் இல்லாது எந்த ஒன்றும் நம்மை தீண்டாது என்ற ஈமானிய உறுதியோடும் பிராத்தணையோடும் தற்போதைய சூழ்நிலையை எதிர் கொள்வோம்
தவக்கல்து அலல்லாஹ்
وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள் கவலையும் கொள்ளாதீர்கள்
நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்
(அல்குர்ஆன் : 3:139)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment