மனைவியும் குழந்தையும்

      சந்தேக புயலே இல்லற
               சந்தோசத்தின்

                 !!!! எமன் !!!!
*--------*--------*-------*-------*-------*-------*------  
           ஜே.யாஸீன் இம்தாதி
         ++++++++++++++++++++
      Bismillahir Rahmanir Raheem
                  ----------------------

இறைவன் வழங்கும் பாக்கியங்களில் குழந்தை செல்வமும் முக்கியமான ஒரு செல்வமாகும்

இவ்வாறு வழங்கப்படும் குழந்தை செல்வம் உருவ ஒற்றுமையில் அவரின் தாய் போலவோ அல்லது தந்தை போலவோ அமைவது அநேகமாக நடைபெற்று வரும் சம்பவம்

அதே நேரம் ஒரு தம்பதியருக்கு பிறக்கும் குழந்தை செல்வம் உருவ ஒற்றுமையில் அவசியம் அந்த குழந்தையின் பெற்றோரை போலவே இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை அந்த பெற்றோரின் பரம்பரைகளில் யாரை போல் வேண்டுமானாலும் தோன்றலாம் காரணம் மரபணு கூறு என்பது சங்கிலி தொடர்பு போல சிலர்களின் பரம்பரைகளில் ஏற்பட்டு இருக்கும் ஒரு வேளை பெற்றோரை போல் இல்லாமலும் அவர்களின் பரம்பரை போல் யாருடைய தோற்றமும் இல்லாமலும் குழந்தைகள் இருக்கலாம் இவைகளை இறைவனின் நாட்டம் என்று முடிவு செய்ய வேண்டுமே தவிர இதை ஒரு சோதனை என்றோ அல்லது தனது மனைவி தனக்கு முன்னால் தவறான தொடர்புடையவராக இருந்திருப்பாரோ என்று எவ்வித ஞானமும் இன்றி சந்தேகம் கொள்வது மிக பெரிய பாவமாகும்

நம் சமூகத்தில் ஒரு பெண் தொடர்ந்து ஆண் பிள்ளைகளை அல்லது பெண் பிள்ளைகளை பெற்றெடுத்தாலும் அல்லது அவர்களின் குடும்பம் எதிர் பார்த்த நிறத்தில் குழந்தையின் நிறம்  விட்டாலும் அல்லது ஊனமான நிலையில் குழந்தை பிறந்து விட்டாலும் உடனடியாக அதன் தாயை குறை கூறுவது அதற்காக சிறு சிறு  விவகாரங்களை கூட பெரிது படுத்துவது நம் குடும்ப பெண்களிடத்தில் அதிகம் காணப்படும் ஒரு கீழ்த்தரமான குணமாகும்

இதன் காரணத்தால் கூட மனித சமூகத்தில் சிலர்களின் இல்லறம் விவாகரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது வேதனையான விசயமாகும்

இது போல் சந்தேகம் அறவே ஒரு பெண்ணிண் கணவனுக்கு அல்லது அவரது குடும்பத்திற்க்கு எழ கூடாது என்பதற்க்காக தான் ஏற்கனவே விவாகரத்து செய்யப்பட்டவர்களை மணக்கும் நேரத்தில் கூட அவர்கள் அவர்களது முதல் கணவன் இழந்ததற்காகவோ அல்லது விவாகரத்து செய்ததற்காகவோ இத்தா எனும் நாட்களை கடை பிடித்தவர்களா என்றும் இஸ்லாம் பார்க்க சொல்கிறது

காரணம் மனிதனின் விரல்களுக்கு ரேகைகள் இருப்பது போலவே ஒரு ஆண் மகனின் விந்து துளிகளுக்கும் கண்ணுக்கு தெரியாத ரேகை அடையாளங்கள் உள்ளது

ஒரு பெண்ணோடு ஒரு ஆண் மகன் ஒரு முறை சயனத்தில் ஈடுபட்டால் கூட அவனது விந்து ரேகைகள் அந்த பெண்ணிண் உடலுக்குள் கிட்ட தட்ட 90 நாட்கள் அழியாமல் இருந்து வருகிறது

அதன் பிறகு தான் அந்த ஆண் மகனின் விந்து துளி அடையாளங்கள் அந்த பெண்ணிண் கருவறையில்  அழிய தொடங்குகிறது

இது போன்ற சூழலில் ஒரு பெண்ணிண் இத்தா கால நிறைவடையும் முன் ஒரு ஆண் மகன் ஒரு பெண்ணை திருமணம் செய்து அதன் பின் குழந்தை யாருடையது  ? என்று விவகாரம் வருமேயானால் அந்த குழந்தை உண்மையில் அவனோடதாக இருந்தாலும் அந்த பழைய கணவனின் விந்து துளி ரேகைகள் அவனது சந்தேகத்தை அறிவியல் ரீதியாக கூட திட்டமிட்டு நியாயப்படுத்தி விடும்

அவ்வாறு நியாய்ப்படுத்தினால் அதுவும் கூட தற்போதைய அவனது மனைவியின் வாழ்வை நாசமாக்கிவிடும் என்ற ஒரு உயரிய நல்ல நோக்கமே இத்தா எனும் இஸ்லாமிய சட்டமாகும்

எனவே சாத்தானிய சந்தேகங்களுக்கு இடம் கொடுத்து ஒரு பெண்ணிண் வாழ்வை நாசத்தில் தள்ளி அதன் காரணமாக நீங்களும் மறுமை நாளில் நரகத்தை அடைந்து விடாதீர்கள்

     ++++++++++++++++++++++++
           அற்புதமான ஹதீஸ்
                    --------------

6847. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து “இறைத்தூதர் அவர்களே! (வெள்ளை நிறமுடைய எனக்கு) என் மனைவி கறுப்பான ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளாள் (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)“ என்று (சாடையாகக்) கேட்டதற்கு

நபி(ஸல்) அவர்கள் உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கவர் “ஆம்“ என்றார்

அவற்றின் நிறம் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்

அவர் “சிவப்பு“ என்று பதிலளித்தார்

நபி(ஸல்) அவர்கள் உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் இருக்கின்றதா? என்று கேட்டார்கள் அவர் “ஆம்“ என்றார்

நபி(ஸல்) அவர்கள் (தன்னுடைய தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?என்று கேட்டார்கள்

அவர் அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம் என கருதுகிறேன் என்று பதிலளித்தார்

நபி(ஸல்) அவர்கள் உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தினைக் கொண்டிருக்கக்கூடும்“ என்றார்கள்

                ஷஹீஹ் புகாரி

         நட்புடன்   J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்