நல்லடியார்கள் மகான்கள்
நல்லடியார்கள் மகான்கள் ************************ கட்டுரை எண் 1524 ******************* மகான்களிடம் நேரடியாக துஆ செய்வதும் அல்லது அவர்களின் பொருட்டால் துஆ செய்வதுமே மகான்களை மதிக்கும் முறையாகும் என்றால் நபி ஆதம் (அலை) அவர்களுக்கு பின்னால் வந்த நபி முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை எந்த இறைத்தூதரும் அவ்வாறே பிரார்த்தனை செய்ய கற்றுக்கொடுத்திருப்பார்கள் ஆனால் எந்த நபியும் பிரார்த்தனை செய்யும் பொழுது மகானின் பொருட்டாகவோ அல்லது நேரடியாகவோ அழைத்து பிரார்த்தனை செய்ததாக ஆதாரப்பூர்வமான ஒரு சான்றும் இல்லை திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்றிலும் கூட அவ்வாறான வழிகாட்டல்கள் அல்லது நேரடியாகவோ மறைமுகமாகவோ உத்தரவுகள் இல்லை மகான்களிடம் கையேந்தி பிரார்த்தனை செய்வது அனுமதிக்கப்பட்டது என்றால் இறந்து அடக்கம் செய்...