பெருநாள் தொழுகை கடமையா


   பெருநாள் தொழுகை பர்ளா  ?
           
     ♦♦♦♦♦♦♦♦♦♦

                    29-01--19
           கட்டுரை எண்1229                  
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                            بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

ஐந்து நேர தொழுகைகளை வருட கணக்கில் நிறைவேற்றாத முஸ்லிம்களும்  கூட பெருநாள் தொழுகையில் பங்கு பெறுவதை பரவலாகவே காணுகிறோம்

இந்நிலையில் பெருநாள் தொழுகை பர்ளா  ?
அல்லது சுன்னாத்தா என்ற சர்ச்சை அவசியமே இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்

இஸ்லாத்தில் சொல்லப்படும் எந்த காரியத்தை  புறக்கணிக்கும் பொழுது மறுமையில் ஒரு முஸ்லிம்  குற்றவாளியாக தண்டனை பெறும் நபராக  மாறுகிறானோ அந்த காரியத்தை  கட்டாய கடமை என்று குறிப்பிடுவதற்க்கு தான் அரபியில் பர்ளு என்று சொல்லப்படுகிறது

ஒரு மனிதன் ஐந்து நேர தொழுகையை புறக்கணித்தான் என்று சொன்னால் நிச்சயம் அவன் மறுமையில் தண்டனை பெறுவான் என்பதை திருக்குர்ஆன் பல இடங்களில் பறை சாற்றுகிறது

அதே நேரம் வருடத்திற்க்கு இரு முறை தொழ வேண்டிய பெருநாள் தொழுகைகளை புறக்கணித்தான் என்று சொன்னால்  அதற்காக அந்த மனிதன் மறுமையில் தண்டிக்க படுவான் என்பதற்க்கு குர்ஆனிலும் ஹதீசிலும் நேரடியான சான்றுகளும் மறைமுகமான சான்றுகளும்  இல்லை

இருப்பினும் பெருநாள் தொழுகை மிகவும் முக்கியமானது என்பதற்க்கு பல விதமான சான்றுகள் ஹதீஸ்களில்  பதியப்பட்டுள்ளது

அவைகளை ஆதாரமாக காட்டி  பெருநாள் தொழுகை என்பது  கடமையான தொழுகை அளவு வலியுருத்தப்பட்டுள்ளது என்று மாத்திரம் கூற முடியுமே தவிர

1 பெருநாள் தொழுகை பர்ளு ( கட்டாய கடமை) என்றோ

2 பெருநாள் தொழுகையை தவிர்த்தால் அது தண்டனைக்கு உரிய குற்றம் என்றோ

3 பெருநாள் தொழுகையை தவற விட்ட மனிதன் அதற்க்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றோ

4 அல்லது பெருநாள் தொழுகையை தவற விட்ட மனிதன் அதை  களா செய்ய வேண்டும் என்றோ
எந்த சட்டமும் நபி (ஸல்) அவர்களால் மென்மையாகவும்  அல்லது  வலியுருத்தியும்  சொல்லப்படவில்லை

இவ்வாறு நாம் கூறுவதற்க்கும் பெருநாள் தொழுகை பர்ளு  அல்ல என்று கூறுவதற்க்கும்   கீழ் காணும் நபிமொழி தெளிவான சான்றாக உள்ளது

أخبرنا قتيبة عن مالك عن أبي سهيل عن أبيه أنه سمع طلحة بن عبيد الله يقول :  " جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أهل نجد ثائر الرأس نسمع دوي صوته ولا نفهم ما يقول حتى دنا فإذا هو يسأل عن الإسلام ؟ فقال له رسول الله صلى الله عليه وسلم " خمس صلوات في اليوم والليلة "

قال هل علي غيرهن ؟ قال لا ، إلا أن تطوع ، قال وصيام شهر رمضان ، قال هل علي غيره ؟قال لا إلا أن تطوع وذكر له رسول الله صلى الله عليه وسلم الزكاة قال هل علي غيرها ؟ قال لا إلا أن تطوع ، فأدبر الرجل وهو يقول " والله لا أزيد على هذا ولا أنقص منه " قال رسول الله صلى الله عليه وسلم " أفلح إن صدق " )

6956. தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அறிவித்தார்

(நஜ்துப் பகுதியைச் சேர்ந்த) கிராமவாசி ஒருவர் தலைவிரி கோலத்துடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள தொழுகை பற்றிக் கூறுங்கள்' என்றார்

அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(நாளொன்றுக்கு) ஐவேளை தொழுகைகள் (உன் மீது கடமையாகும்) நீயாக விரும்பிக் கூடுதலாக ஏதேனும் தொழுது கொண்டால் தவிர' என்றார்கள்

அவர் அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள நோன்பு பற்றிக் கூறுங்கள் என்றார் நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதம் முழுவதும் நீ நோன்பு நோற்பது உன் மீது கடமையாகும்)

நீயாக விரும்பிக் கூடுதலாக ஏதேனும் நோன்பு நோற்றால் தவிர என்றார்கள்

தொடர்ந்து அவர், அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள ஸகாத் பற்றிக் கூறுங்கள் என்றார்

அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஸகாத் உள்பட) இஸ்லாமிய சன்மார்க்க நெறிகளை அவருக்குத் தெரிவித்தார்கள் அவர் உங்களைக் கண்ணியப்படுத்திய(இறை)வன் மீது சத்தியமாக! நான் (இவற்றில்) எதனையும் கூடுதலாகச் செய்யமாட்டேன் அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ளவற்றில் எதனையும் நான் குறைக்கவுமாட்டேன் என்று கூறிவிட்டுத் திரும்பிச் செல்லலா)னார்

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவர் (தாம் கூறியபடி) உண்மையாக நடந்தால் 'வெற்றியடைவார்' அல்லது இவர் (கூறியபடி) உண்மையாக நடந்தால் சொர்க்கத்தில் நுழைவார்' என்று கூறினார்கள்

            ஸஹீஹ் புகாரி

                  ***********

ஜும்மா நாளும் பெருநாள் தினமும் ஒரே தினத்தில் வந்தால் ஜும்மாவை தவிர்த்து விட்டு பெருநாள் தொழுதாலே போதுமானது என்ற நபிகளாரின் அனுமதியை  பெருநாள் தொழுகை கட்டாய கடமை என்று  மேற் காணும் ஹதீசுக்கு எதிராக  புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

மாறாக பெருநாள் தொழுகையும் பர்ளான தொழுகைக்கு மிகவும்  நெருங்கிய  சிறப்பான தொழுகை  என்றே புரிந்து கொள்ள இயலும்

காரணம் பெருநாள் தொழுகை  என்பது வருடத்திற்க்கு ஒரு முறை வருவதாகும்

ஜும்மா தொழுகை என்பது வாரம் ஒரு முறை வழக்கமாக வருவதாகும்

மாதவிடாய் நிலையுள்ள பெண்களையும் பெருநாள் திடலுக்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தர சொன்னார்கள் என்றால் அது பெருநாள் தொழுகை கட்டாய கடமை என்பதற்காக அல்ல
மாறாக அந்த பெருநாளின் மகிழ்சியை அது போன்ற பெண்களும் இழந்து விட கூடாது என்பதற்காக தான்

இது எல்லாவற்றுக்கும் மேல் பெருநாள் தொழுகை கட்டாய கடமை என்பதை  பற்றி நேரடியாக ஹதீஸ்கள் இல்லாத காரணத்தால் தான் ஹதீஸ் கலை வல்லுனர்கள் காலத்திலேயே பெருநாள் தொழுகை பர்ளா ? அல்லது  சுன்னத்தா என்ற சர்ச்சை தொடர்ந்து நிலவி வருகிறது

எனவே இவ்விசயத்தில் பெருநாள் தொழுகை ஐந்து நேர தொழுகையை போன்று கட்டாய கடமை என்று அழுத்தமாக கூற தெளிவான சான்றுகள் இல்லை என்பதே நாம் சுயமாக ஆய்வு செய்த அடிப்படையில் புரிந்து கொண்ட உண்மை

           ******************
ஹதீஸ்கலை வல்லுனர்கள் காலத்திலேயே இவ்விசயத்தில் இரு வேறு கருத்து வேறுபாடு நிலவுகிறது என்பதை உலமாக்கள் அறிய அதன் அரபு வாசகங்களை கீழே பதித்துள்ளேன்

اختلف العلماء في حكم صلاة العيدين على ثلاثة أقوال :

القول الأول :

أنها سنة مؤكدة . وهو مذهب الإمامين مالك والشافعي .

والقول الثاني :

أنها فرض على الكفاية ، وهو مذهب الإمام أحمد رحمه الله .

القول الثالث :

أنها واجبة على كل مسلم ، فتجب على كل رجل ، ويأثم من تركها من غير عذر. وهو مذهب الإمام أبي حنيفة رحمه الله ورواية عن الإمام أحمد . وممن اختار هذا القول شيخ الإسلام ابن تيمية والشوكاني رحمهما الله .

انظر : المجموع (5/5) ، المغني (3/253) ، الإنصاف (5/316) ، الاختيارات (ص 82) .

واستدل أصحاب القول الثالث بعدة أدلة ، منها :

1- قوله تعالى : (فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ) الكوثر/2.

قال ابن قدامة في "المغني" : المشهور في التفسير أن المراد بذلك صلاة العيد اهـ .

وذهب بعض العلماء إلى أن المراد من الآية الصلاة عموماً ، وليس خاصة بصلاة العيد ، فمعنى الآية : الأمر بإفراد الله تعالى بالصلاة والذبح ، فتكون كقوله تعالى : (قُلْ إِنَّ صَلاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ) الأنعام/162.

واختار هذا القول في معنى الآية ابن جرير (12/724) ، وابن كثير (8/502) .

فعلى هذا ، لا دليل في الآية على وجوب صلاة العيد .

2- أن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أمر بالخروج إليها ، حتى أمر النساء بالخروج إليها .

روى البخاري (324) ومسلم (890) عَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْها قَالَتْ : أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُخْرِجَهُنَّ فِي الْفِطْرِ وَالأَضْحَى الْعَوَاتِقَ وَالْحُيَّضَ وَذَوَاتِ الْخُدُورِ ، فَأَمَّا الْحُيَّضُ فَيَعْتَزِلْنَ الصَّلاةَ وَيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ . قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، إِحْدَانَا لا يَكُونُ لَهَا جِلْبَابٌ . قَالَ : لِتُلْبِسْهَا أُخْتُهَا مِنْ جِلْبَابِهَا .

(الْعَوَاتِق) جَمْع عَاتِق وَهِيَ مَنْ بَلَغَتْ الْحُلُم أَوْ قَارَبَتْ , أَوْ اِسْتَحَقَّتْ التَّزْوِيج .

(وَذَوَات الْخُدُور) هن الأبكار .

والاستدلال بهذا الحديث على وجوب صلاة العيد أقوى من الاستدلال بالآية السابقة .

قال الشيخ ابن عثيمين في "مجموع الفتاوى" (16/214) :

"الذي أرى أن صلاة العيد فرض عين، وأنه لا يجوز للرجال أن يدعوها، بل عليهم حضورها، لأن النبي صلى الله عليه وسلم أمر بها بل أمر النساء العواتق وذوات الخدور أن يخرجن إلى صلاة العيد، بل أمر الحيض أن يخرجن إلى صلاة العيد ولكن يعتزلن المصلى، وهذا يدل على تأكدها" اهـ .

وقال أيضاً (16/217) :

"والذي يترجح لي من الأدلة أنها فرض عين ، وأنه يجب على كل ذكر أن يحضر صلاة العيد إلا من كان له عذر" اهـ .

وقال الشيخ ابن باز في "مجموع الفتاوى" (13/7) عن القول بأنها فرض عين ، قال :

"وهذا القول أظهر في الأدلة ، وأقرب إلى الصواب" اه

         நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்