நுகர்வோரை சாதகமாக்கும் முதலாளியா

    நுகர்வோரை சாதகமாக்கும்

        முதலாளியா நீங்கள்

♦♦♦♦♦♦♦♦♦♦♦

                       18-10--18

கட்டுரை எண்1191வியாழன்
                      
           !!J . Yaseen iMthadhi !!
                   **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  
          
         ★★★★★★★★★★★

நாம் வைத்திருக்கும் கடையில் ஒரு பொருளை வாங்க வரும் நுகர்வோர் பல நிலைகளில் இருப்பார்கள்

ஒன்று நாம் விற்பனை செய்யும் பொருளின்  தரத்தை அறிந்து அதன்  பின்பு நம் கடையில் பொருளை வாங்க வருவோரும் உண்டு

நம் மீதுள்ள நம்பிக்கையில் நாம் விற்பனை செய்யும் பொருளின் தரம் நன்றாக இருக்கும் என்று கருதி கொண்டு நாம் விற்பனை செய்யும் பொருளை வாங்க வருவோரும் உண்டு

மற்றவர்களின் ஆலோசனை பரிந்துறை  பெயரில் நாம் விற்க்கும் பொருளை வாங்க வருவோரும் உண்டு

நுகர்வோர் கூட்டத்தை பார்த்து இந்த கடையில் பொருள் நன்றாக இருக்குமோ என்ற நம்பிக்கையில்  நாம் விற்க்கும் பொருளை வாங்க வருவோரும் உண்டு

எதை பற்றிய ஞானமும் இல்லாது எவரிடமும் நம் கடையின் விற்பனை பொருள் தரத்தை பற்றி   விசாரிக்காது  அப்பாவித்தனமான நிலையில்  இருக்கும் நபர்களும் நாம் விற்க்கும்  பொருளை வாங்க வருவோரும் உண்டு

இதில் ஒரு சிலர்கள் நமது கடையில் பொருளை வாங்கிய பின்பு சற்று நேரத்திலோ அல்லது மறு நாளோ அவர் வாங்கிய பொருள் அவர் கொடுத்த விலையின் அளவை விட குறைந்தது என்று விளங்கியோ
அல்லது அவர் வாங்கிய பொருளில் அவருக்கு திருப்தி இல்லை என்பதை புரிந்தோ

அதை திரும்ப தருவதற்க்கு மீண்டும் நம்  கடை நோக்கி வருவார்கள்

இந்நிலையில் அவர் திரும்ப கொண்டு வரும் பொருளை வாங்கி கொண்டு அதற்க்கு மாற்று பொருளை கொடுப்பது அல்லது மாற்றி கொடுக்காது இருப்பது கடை முதலாளியின் உரிமைக்கு உட்பட்டது  என்றாலும்
சட்ட ரீதியாக யாரும் கடை முதலாளியை விற்ற பொருளை திரும்ப பெறுவதற்க்கு வலியுருத்த முடியாது என்றாலும்

இஸ்லாமிய பார்வையில் நுகர்வோரிடம் இருந்து  அந்த பொருளை திரும்ப பெற்று கொண்டு அவரிடம் வாங்கிய  பணத்தை திரும்ப ஒப்படைப்பதும் அல்லது அதற்க்கு  மாற்று பொருளை அவருக்கு  கொடுப்பதும் சிறப்பான நற்குணமாகும்

மேலோட்டமாக பார்க்கும் போது இது அவசியமற்ற சட்டமாக பலருக்கு தோன்றினாலும் இதிலும் பல நன்மைகளை கடை முதலாளிகள் இம்மையிலும் மறுமையிலும் பெறுகிறார்கள்

1 - பொருளை திரும்ப பெறும் போது அதை திருப்பி கொடுக்கும் நுகர்வோர் மனதளவில் மகிழ்ச்சி அடைவார்

2 - அந்த மகிழ்ச்சியே அவரை நம் கடையில் தொடர் நுகர்வோராக மாற்றும்

3 - வாங்கும் பொருளில் குறைகள் இருந்தால் கூட அதை திருப்பி வாங்கி கொள்ளும் அளவு நியாயமான வியாபாரி என்று நமக்கு அடைமொழியை பிறர்களிடம் அறிமுகம் செய்து மறைமுகமாக அவரை அறியாமலேயே நமக்காக விளம்பரம்  செய்வார்

4 - மறுமுறை வாங்கிய பொருளை திருப்பி கொண்டு வரும் போது அதை பெற்று கொள்ளாது போனாலும் ஏற்கனவே ஒரு முறை திரும்ப பெற்றவர் தானே என்று இரண்டாம் முறை அதை  ஜீரணித்து கொள்வார்

இது யாவற்றுக்கும் மேலாக இஸ்லாம் இந்த செயலுக்கு நற்கூலியை வழங்குகிறது

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ اَقَالَ مُسْلِمًا اَقَالَهُ اللهُ عَثْرَتَهُ

ஒரு முஸ்லிம் விற்பனை செய்த அல்லது விலைக்கு வாங்கிய பொருட்களைத் திரும்பப் பெறுவதை

எவர் பொருந்திக் கொள்கிறாரோ

அவருடைய தவறுகளை அல்லாஹுதஆலா மன்னித்து விடுகிறான்

என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

         நூல்  அபூதாவூத்

        நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்