ஆலீம்களே ஆபத்துகளை தவிர்ப்பீர்

       ஆலீம்களே ஆபத்துகளை

             அரவணைக்காதீர்

!!========================!!

       15-05-18- செவ்வாய் கிழமை
             *********************
            கட்டுரை எண் 1153
                   -------------------
   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************   
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

மார்க்கத்தின் விடி வெள்ளிகளாக திகழ வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் ஆலீம்கள்

மறுமையில் நபிமார்களுக்கு அடுத்த அந்தஸ்தத்தை பெறும் பாக்கியம் பெற்றவர்களும் ஆலீம்கள்

தவறிய பாதையில் சென்று கொண்டுள்ள மனித சமுதாயத்தை நல்வழி படுத்தி அவர்களுக்கும்  சொர்க்கத்திற்கான பாதையை காட்டும் பாக்கியமும் திறனும்  பெற்றவர்கள் ஆலீம்கள்

பிற மக்களை சைத்தான் வழி கெடுக்க திட்டம் போடுவதை விட ஆலீம்களை வழி கெடுப்பது தான் சாத்தானின் அபாரமான இலட்சியம் ஆகும்

காரணம் ஆலீம் என்ற வார்த்தைக்கு பின்னால் அவரது சொல்லை கேட்கும் ஒரு சமூகமே பின்பற்றி செல்லும்  என்ற நிலை இருப்பதால் சைத்தான்களுக்கு ஆலீம்களை வழி கெடுப்பதின் மூலம் அவரை முன்னோடியாக கருதும் மக்களை வழி தவற செல்ல வைப்பதும் அதன் மூலம் அவர்கள் ஏற்றுள்ள கொள்கையின் மீது அதிருப்தியை ஏற்படுத்த முனைவதும் தான் சாத்தானின் மூல இலட்சியம் ஆகும்

1- குறிப்பாக மார்க்க சந்தேகம் கேட்கிறோம் எனும் பெயரில் பல வகைகளில்  தொடர்பில் வரும் அந்நிய பெண்களை புறக்கணிப்பது

2- ஓதி கொடுக்க செல்கிறோம் எனும் பெயரில் பிறர்களின் இல்லம் தேடி சென்று ஓதி கொடுப்பது

3- மக்தப் பாடசாலைகளில் வரும் மாணவ மாணவியர்களிடம் சகஜமாக எதார்த்தமாக இருப்பது

இன்னும் இது போன்று எவையெல்லாம் ஒரு மனிதனை தடம் புரள செய்யுமோ

அல்லது தேவையற்ற  சந்தேகங்களை மக்கள் மனதில்  இடம் பெற செய்யுமோ

அல்லது அவதூறுகளை சுமக்கும் நிலையை ஏற்படுத்துமோ அவைகளை விட்டும் தூரமாக விலகி இருப்பது மிகவும் அவசியமானதாகும்

இருபது வருடம் கட்டி காத்து வரும் கண்ணியத்தை ஒரே நொடியில் சைத்தான் வீழ்த்தி விடுவான் என்பதற்க்கு உலகில் நடைபெற்று வரும் பலரது இழிவான தகவல்களே தக்க சான்றாக உள்ளது

ஆலீம்களுக்கு என்று இந்த அறவுரை எச்சரிக்கை கட்டுரை தீட்டப்பட்டு இருந்தாலும்

இந்த படிப்பினை அனைத்து ஆண் பெண் அனைவருக்கும்  பொதுவானது என்பதை மறந்து விட வேண்டாம்

وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً   وَسَآءَ سَبِيْلًا‏ 

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்

நிச்சயமாக அது மானக்கேடானதாகும்

மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது

            (அல்குர்ஆன் : 17:32)

وَمَا كَانَ اللّٰهُ لِيُـضِلَّ قَوْمًا بَعْدَ اِذْ هَدٰٮهُمْ حَتّٰى يُبَيِّنَ لَهُمْ مَّا يَتَّقُوْنَ‌ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ 

எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்

            (அல்குர்ஆன் : 9:115)

وَّلَاُضِلَّـنَّهُمْ وَلَاُمَنِّيَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُبَـتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّٰهِ‌ وَمَنْ يَّتَّخِذِ الشَّيْطٰنَ وَلِيًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِيْنًا ‏ 


மேலும், நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன்

ஆசைகளில் அவர்களை உழலவைப்பேன்

இன்னும், நான் அவர்களுக்குக் கட்டளையிடுவேன்

(அதன்படி) அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுத்து விடுவார்கள் மேலும், நான் அவர்களுக்கு ஆணை பிறப்பிப்பேன்

(அதன்படி) அல்லாஹ் படைத்த ஒழுங்கமைப்பில் அவர்கள் மாற்றங்கள் செய்வார்கள்

எவன் அல்லாஹ்வை விட்டுவிட்டு, இந்த ஷைத்தானைத் தன்னுடைய நண்பனாகவும், பாதுகாவலனாகவும் எடுத்துக் கொள்கின்றானோ அவன் அப்பட்டமான இழப்புக் குரியவன் ஆவான்

          (அல்குர்ஆன் : 4:119)


            நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்