தொழுகையில் பல எண்ணங்கள்
தொழுகையில் பல எண்ணம் ****************** தொழுகையை நிறைவேற்றுவதற்கு தக்பீர் கட்டியவுடன் உலக தொடர்பாக பல சிந்தனைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது நல்லடியார்கள் இறையச்சமுடையவர்கள் போன்றவர்களுக்கு இந்நிலை ஏற்படாது எனக்கு இந்நிலை ஏற்படுகிறது எனில் எனது தொழுகையை இறைவன் எப்படி ஏற்றுக்கொள்வான் ? தொழுதும் பயனற்ற வழிபாடாக மாறி விடுமே ? என்ற ஓர் சந்தேகம் அநேகருக்கு இயல்பாகவே ஏற்படும் இந்த சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டிய சந்தேகங்களில் இதுவும் ஒன்று காரணம் தொழுகையை நிறைவேற்றும் போது பிற சிந்தனைகள் இல்லாது எவராலும் தொழுகையை நிறைவேற்றவே இயலாது நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களும் கூட தொழுகையை நிறைவேற்றும் நிலையில் பல சிந்தனைகளுக்கு உட்பட்டார்கள் என்பதற்கும் தொழுகையின் ரக்அத்துகளை மறந்தார்கள் என்பதற்கும் அநேகமான சான்றுகள் உள்ளது ஒவ்வொரு தொழுகையின் ரக்அத்துகளை தொழுகும் நிலையில் மனதில் எண்ணியே சரியாக நிறைவு செய்கிறோம் தொழுகைக்கு தக்பீர் கட்டிவிட்டால் வேறு சிந்தனையே வராது என்றிருந்தால் தொழுகையின் எண்ணிக்கையும் மனதில் வர கூடாது இமாமாக இரு