அறிவீனர்களின் கதறல்களும் ஒப்பாரிகளும்
அறிவீனர்களின் கதறல்களும் ஒப்பாரிகளும் ***************************** கட்டுரை எண் 1548 ***************** முறையான இறைநம்பிக்கை குடியிருக்கும் முஸ்லிமால் மட்டுமே ஒரு தவறை தவறு என்று முழு மனதுடன் ஏற்க முடியும் முறையான இறைநம்பிக்கை இல்லாத எவராலும் ஒரு தவறை சிறு தவறாக சித்தரிக்கவும் முடியும் தவறே இல்லை என்று மடமையாக மறுத்து மனமுரண்டாக வாதிக்கவும் இயலும் இஸ்லாத்தை விமர்சிக்கும் எவரும் இதுவரை அறிவுப்பூர்வமாகவோ அல்லது இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றோ ஆதாரங்களுடன் உரியவர்களிடம் நிரூபித்ததும் இல்லை சவால்களை ஏற்றுக்கொண்டதும் இல்லை முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்யும் அறிவீன செயல்களையும் வரம்பு மீறி நடக்கும் அவலங்களை மட்டுமே இஸ்லாமிய கருத்தாக அவர்களால் வஞ்சகமாக சித்தரிக்க முடியும்...