அவ்லியா தொடர் பாகம் நான்கு

       மகான்களை மட்டப்படுத்தும்
               ஞானசூனியங்கள் 
           *****************************
    பாகம் நான்கு.  கட்டுரை எண் 1544
                    *****************

இறை வசனங்களையும் இறைத்தூதர் போதனைகளையும் வாழ்நாளில் இயன்றவரை கடைபிடிப்பவர்களே  மகான்கள்



மனிதன் என்ற முறையில் இயல்பாக ஏற்படும் தவறுகளில் இருந்தும் கூட அதிகமான முன்னெச்சரிக்கையை பின்பற்றுபவர்களே மகான்கள் 

அத்தகையவர்கள் பெயரால் தர்ஹாக்களை உருவாக்கி வைத்து கொண்டு அவர்களின் சன்னதியில் தர்ஹா வியாபாரிகள் அரங்கேற்றம் செய்யும் ஒவ்வொரு அம்சங்களையும் இஸ்லாத்துடன் உரசினால் மகான்களை உண்மையில் இழிவுபடுத்தி  மட்டப்படுத்தக்கூடியவர்கள் 
தர்ஹா நிர்வாகிகளும் மகான்களின் 
துதி பாடுவதையே இஸ்லாமாக கருதும்  கூட்டத்தவர்களுமே ஆவர்

செய்திகளை வாசிக்கும் தொலைக்காட்சிகள் ஊடகங்கள் யாவும் தர்ஹா பக்தர்கள் என்றும் தர்ஹா வழிபாடு துவங்கியது என்றும் அறிக்கை வாசிக்கும் அளவு மகான்களின் மண்ணறைகள்
 வழிபாட்டுத்தலங்களாக முற்றிலும் மாற்றப்பட்டு விட்டது 

ஒரு கோயிலை சுற்றி பல குட்டி சாமி  சிலைகள் உருவாக்கப்பட்டு இருப்பது போல்  ஒரு தர்ஹாவை சுற்றி பல குட்டி தர்ஹாக்கள் மண்ணறைகள் மெயின் தர்ஹாவுக்கு வெளிப்புறத்தில் வடிக்கப்பட்டிருப்பதை காணலாம்

தர்ஹாக்களை ஆதரிக்கும் ஆலீம்களும் கூட தர்ஹாவுக்கு எதிராவனர்களை விமர்சனம் செய்வதில் மாத்திரம் தீவிரம் காட்டுகிறார்களே தவிர தர்ஹாக்களில் மார்க்கத்திற்கும் பகுத்தறிவுக்கும்  முரணாக நடக்கும் ஆடல் பாடல் 
தீ மிதித்தல் 
காஃபாவை போன்று மண்ணறைகளை சுற்றி வருவது 
மத்தாப்பு கொளுத்துதல் 
கச்சேரிகளை நடத்துவது 
போன்ற  எந்த அம்சத்தையும் கண்டிப்பது இல்லை

தர்ஹா நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்படும் மார்க்க நிகழ்சிகளில் கூட மகான்களின் பெயரால் பல கட்டுக் கதைகளை பேசி மக்களை மேலும் மூடர்களாக மாற்றி  வருகிறார்களே தவிர தர்ஹாக்களில் பகிரங்கமாக  நடக்கும் அனாச்சாரங்களை கூட குறைந்த பட்சம்  கண்டித்து பேசுவோம் என்ற மனநிலைக்கு இதுவரை ஆதரிக்கும் இமாம்கள்  வரவில்லை 

இறைத்தூதராகவும் பல அற்புதங்களை இறையருளால் செய்தவராகவும் இன்று வரை வானளவில் உயிருடன் இருப்பவராகவும் மறுமை நாள் நெருக்கத்தில் மீண்டும் இறைவனால் உலகிற்கு அனுப்பப்படுபவராகவும் இருக்கும் 
நபி ஈஸா (அலை) அவர்களிடம் கையேந்தும் கிருஸ்தவர்களை வழிகேடர்கள் என்று வர்ணிக்கும் இவர்களுக்கு 

நேரடி அறிமுகம் இல்லாத
யார் என்றே அறியாத 
ஆய்வுக்கு உட்படுத்த முடியாத 
அடக்கம் செய்யப்பட்ட தர்ஹாக்களுக்கு சென்று கையேந்தி பிரார்த்தனை செய்வது மட்டும் மார்க்கத்தின் சுன்னத்தாக தெரிவது விந்தையிலும் விந்தை

இணைவைத்தல் எனும் மாபாவத்தை செய்யும் சமுதாயமாக இந்துக்களும் இதர மதத்தவர்களும் இருக்கிறார்கள் என்று மட்டுமே அறிந்து வைத்துள்ளனரே தவிர
இணை வைத்தல் எனும் பெரும்பாவம் தர்ஹா எனும் வடிவத்தில் முஸ்லிம் சமூகத்திலும் நெடுங்காலமாக சாத்தானின் சூழ்சியால்  நுழைக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படை சிந்தனை அறவே இல்லை

நல்லடியார்களை  மகான்களை இறைவன் படைத்ததே முஸ்லிம்கள் அவர்களின் மண்ணறைகளுக்கு சென்று கையேந்துவதற்கே  என்ற குருட்டு நம்பிக்கையில் வாழ்கின்றனர் 


وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَيُـؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ‌  وَيَوْمَ الْقِيٰمَةِ يَكُوْنُ عَلَيْهِمْ شَهِيْدًا‌ ‏

வேதமுடையவர்களில் எவரும் 
தாம் இறப்பதற்கு முன் 
அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்

(அல்குர்ஆன் : 4:159)


பாகம்  ஐந்து இன்ஷா அல்லாஹ் தொடரும் 


      நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                          16-12-2025

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்