அறிவும் அறிவியலும்
அறிவும் அறிவியலும்
மார்க்கத்தை தீர்மானிக்காது
***************************
இஸ்லாம் எச்சரிக்கும் வழிகேடுகளுக்கு பகுத்தறிவு தீர்வு தராது
மாறாக குர்ஆன் சுன்னா அடிப்படை மட்டுமே தீர்வை தரும்
காரணம் பகுத்தறிவும் அறிவியலும்
ஆன்மீக நம்பிக்கையை சரி காணாது
ருகூவில் ( குனிந்த நிலையில் இருக்கும்)
இமாம் ஜமாத்தை வேகமாக ஓடிச்சென்று அடைந்தால்
அந்த ரக்அத்தையும் தவறாது அடைய முடியும் என்று பகுத்தறிவு குறிப்பிடும்
ஆனால் அச்செயலை நபிமொழி தவறு
என்று குறிப்பிடுகிறது
நோன்பு திறக்கும் நேரத்தை அடைந்து விட்டாலும் சில விநாடிகள் பிற்படுத்தி நோன்பு திறப்பதை பகுத்தறிவு பேணுதல் என்று குறிப்பிடும்
ஆனால் அச்செயலை பாவம் என்று
நபிமொழி குறிப்பிடுகிறது
இது போல் பல உவமைகளை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம்
சுருக்கமாக குறிப்பிடுவதாக இருந்தால்
மறுமை வெற்றியை தீர்மானிக்கும்
எந்த ஒன்றையும் மனிதனின் அறிவாலும் அறிவியலாலும் கண்டறிய முடியாது
இந்த சாரத்தை உள்வாங்கி கொள்ளும்
எந்த முஸ்லிமும்
தனது வாழ்வில் பித்அத்துகளை அங்கீகரிக்க மாட்டான்
இமாம்கள் முன்னோர்கள் சமூக வழக்கங்கள் என்ற பெயரால் பித்அத்துகளை ஜீரணிக்க மாட்டான்
இறைவனின் கட்டளைக்கும் இறைத்தூதரின் வழிகாட்டுதலுக்கும் மாறு
செய்ய துணிய மாட்டான்
சஹீஹ் முஸ்லிம் – 602
إِذَا سَمِعْتُمُ الْإِقَامَةَ فَامْشُوا إِلَى الصَّلَاةِ وَعَلَيْكُمُ السَّكِينَةُ وَالْوَقَارُ
وَلَا تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا
இகாமத் சொல்லப்படுவதை நீங்கள் கேட்டால் அமைதியாகவும் நிதானமாகவும் நடந்து செல்லுங்கள்
விரைந்து செல்ல வேண்டாம்
எந்த நிலையை அடைகிறீர்களோ அந்த ரக்அத்தை நிறைவேற்றுங்கள்
எந்த ரக்அத்தை தவற விடுகிறீர்களோ அதை ( தனித்து ) நிறைவேற்றுங்கள்
சஹீஹ் புகாரி – 1957
لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ
மக்கள் நோன்பு திறப்பதை விரைவாக நிறைவேற்றும் வரை நன்மையில் தொடர்வார்கள்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
12-1-26
Comments
Post a Comment