சிறந்த தந்தை

            சிறந்த தந்தை யார்  ?
                  ******************

தனது சிரமத்தை தனது சந்ததிகளும் 
சுமந்து விடக்கூடாது என்று ஆசைப்படுவது தகப்பனின் குற்றம் இல்லை 

ஆனால் 
சிரமம் என்றால் என்ன
சிக்கல் என்றால் என்ன
பொறுமை  என்றால் என்ன
வீரம் என்றால் என்ன
விவேகம் என்றால் என்ன 
மன வலிமை என்றால் என்ன
என்பதை நேரடியாகவோ 
அல்லது தனது நடவடிக்கை மூலமாகவோ சந்நததிகளுக்கு கற்றுக்கொடுக்காது இருப்பதே தகப்பனாரின் குற்றம்

இவைகளுக்கெல்லாம் ஆணிவேறாக அமைவது முறையான இறைநம்பிக்கை 

இறைவனின் விதியில் இல்லாத ஒன்று எதுவும் நடவாது என்ற அஸ்த்திவாரத்தை சந்ததிகளின் உள்ளத்தில் சிறுவயதில் சீராக விதைத்து விட்டாலேஅவர்களின் மன உறுதியை 
 சரிந்து விட செய்யாது 

தந்தை  இறந்து பல வருடம் சென்றாலும் 
எனது தந்தையின் முயற்சியே இந்நிலைக்கு காரணம் என்று சந்ததிகள் தனிமையில் சிந்திக்கும் சூழலை உருவாக்கி செல்ல வேண்டும்







نِ ابْنِ عَبَّاسٍؓ قَالَ: كُنْتُ خَلْفَ النَّبِيِّؐ يَوْماً فَقَالَ: يَا غُلاَمُ! إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ اِحْفَظِ اللّٰهَ يَحْفَظْكَ، اِحْفَظِ اللّٰهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللّٰهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللّٰهِ، وَاعْلَمْ أَنَّ اْلاُمَّةَ لَوِاجْتَمَعَتْ عَلَي أَنْ يَّنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفُعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللّٰهُ لَكَ، وَإِنِ اجْتَمَعُوا عَلَي أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللّٰهُ عَلَيْكَ، رُفِعَتِ اْلاَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

ஒரு முறை நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் 
(ஒரு வாகனத்தில்) அமர்ந்திருந்தேன்

 மகனே உனக்கு (முக்கியமான) 
சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன் 
அல்லாஹ் வின் கட்டளைகளைப் பாதுகாப்பீராக
அவன் உம்மைப் பாதுகாப்பான் அவனது கடமைகளைப் பேணிவந்தால் அவனை உனக்கு முன்னால் பெற்றுக் கொள்வீர்
(அவனுடைய உதவி உனக்கு கிடைத்துக் கொண்டிருக்கும்) 

ஏதேனும் கேட்க நீர் விரும்பினால் அல்லாஹ் விடமே கேட்பீராக

நீர் உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடுவீராக

முழு சமுதாயமும் ஒன்றுசேர்ந்து உனக்கு நன்மை செய்ய நாடினாலும் அல்லாஹ் உனக்கு எதை (நிர்ணயித்து) எழுதி வைத்து விட்டானோ அதைத் தவிர (கூடுதலாக வேறு) எந்த நன்மையையும் அவர்கள் உனக்கு செய்துவிட முடியாது

அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு தீங்கு விளைவிக்க நாடினாலும் அல்லாஹ் உனக்கு எதை (நிர்ணயித்து) எழுதி வைத்து விட்டானோ அதைத் தவிர (கூடுதலாக வேறு) எந்த தீங்கையும் அவர்கள் உனக்கு செய்துவிட முடியாது

(விதியை எழுதும்) எழுது கோல்கள் (விதிகளை எழுதி முடித்த பின்) உயர்த்தப்பட்டுவிட்டன
(விதிகள் எழுதப்பட்ட) ஏடுகளின் மை காய்ந்து விட்டது (விதியில் எழுதப்பட்ட முடிவுகளில் சிறிதளவும் மாற்றம் செய்ய முடியாது) என்பதை அறிந்து கொள்வீராக! என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்

                    நூல்  திர்மிதி

    நட்புடன்  J .யாஸீன் இம்தாதி
                         29-12-2025

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்