அவ்லியா தொடர் ஐந்து
மகான்களை மட்டப்படுத்தும்
ஞானசூனியங்கள்
*****************************
பாகம் ஐந்து . கட்டுரை எண் 1545
*****************
ஒவ்வொரு ஊரிலும் கோயில்களை சுற்றி குலசாமிகள் குட்டி சாமிகள் உருவாக்கப்பட்டு மாற்று மதத்தவர்களால் சிறப்பித்து வழிபாடு செய்யப்படுவது போல்
ஒவ்வொரு பகுதியிலும் மகான்களின் பெயரால் நல்லடியார்கள் பெயரால் தர்ஹாக்கள் உருவாக்கப்பட்டு வழிபாடுகளும் குருட்டு நம்பிக்கைகளும் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது
சேவல் கோழியை அறுத்து பாத்திஹா ஓதும்
கணவாய் இப்ராஹீம்ஷா
தர்கா மதுரை சோழவந்தான் பகுதியில் உள்ளது
வழக்குகள் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த தர்காவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மகானுக்கு சேவல் கோழியை நேர்சை செய்து அறுத்து பலியிட்டு பிரார்த்தனை செய்தால் தீர்வு கிடைப்பதாக தர்ஹாவில் ஓதிப்பார்க்கும் புரோகித தொழில் செய்யும் புரோக்கர்களால் கதை கட்டப்பட்டுள்ளது
ஒவ்வொரு அமாவாசையிலும் கப்ரில் இருந்து கொண்டே மூச்சு விடும் கோரி அம்மாஜி தர்கா என்பது திருவள்ளூர் எறையூர் பகுதியில் கட்டப்பட்டுள்ளது
இந்த தர்காவில் ஒரே குடும்பத்தை சார்ந்த பதினாறு நல்லடியார்களுக்கு சமாதிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் அக்கா தங்கைகள் என்று நம்ப வைக்கப்பட்டுள்ளது
இதில் அடக்கம் செய்யப்பட்ட
ஒரு பெண் மகான்
சந்ததி இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் வழங்குவதாகவும்
ஒரு பெண் மகான்
திருமணம் நடக்காதவர்களுக்கு திருமண பாக்கியம் வழங்குவதாகவும்
ஒரு பெண் மகான்
புற்று நோயை நீக்குவதாகவும்
ஒவ்வொரு கப்ருக்கும் வித்தியாசமான புனைக்கதைகள் உருவாக்கப்பட்டு மக்களை முட்டாளாக்கப்பட்டு வருகிறது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கன்னிபீவி தர்கா எனும் பெயரில் சிறு வயதில் மரணம் தழுவிய இளம்பெண்ணுக்கு தர்ஹா கட்டப்பட்டு
அதற்கும் பல கதைகள் புனையப்பட்டுள்ளது
சுருங்க சொன்னால் மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மருத்துவத்தை அல்லது வேறு எதையும் நாடி செல்ல வேண்டியது இல்லை மாறாக ஒவ்வொரு துறைக்கும்
பல மகான்கள் அடக்கம் செய்யப்பட்டு அவர்களின் மண்ணறைகள் தர்ஹாக்களாக புனித இடங்களாக இருப்பதாகவே மூடநம்பிக்கை விதைக்கப்பட்டு உள்ளது
இந்த நம்பிக்கையை அப்பாவி மக்கள் உள்ளத்தில் திணிக்கும் விதமாக ஒவ்வொரு தர்ஹாவிலும் சிலர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு
இதர உதவிகள் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை போலவும்
அந்த தர்ஹாவில் தங்கிய காரணத்தால் அவர்கள் பெயரால் நேர்ச்சை செய்த காரணத்தால்
குணம் அடைவதை போலவும் நடிக்க வைக்கப்படுகிறது
இக்கொள்கையை கற்றுக்கொடுப்பதற்கு இஸ்லாம் தேவை இல்லை
இஸ்லாம் அல்லாத இதர சித்தாந்தங்கள் அனைத்தும் இக்கொள்கை மீதே நெடுங்காலமாக நிறுவப்பட்டுள்ளது
தனித்து விளங்கும் இஸ்லாம் என்று ஒரு புறம் பெருமையாக பேசிக்கொண்டு
மறுபுறம் இஸ்லாத்திற்கும் இதர கொள்கைகளுக்கும் வேறுபாடு இல்லை என்பதை போல் சித்தரிக்கும் கேவலமான சித்திரத்தை மகான்களே அங்கீகரித்திருப்பார்களா என்பதை சிந்திப்பது கடமையானது
ஒவ்வொரு தர்ஹாவிலும்
ஆள் உயர காணிக்கை பெட்டிகளை வைத்திருப்பது இதன் பின்னியை தெளிவாக விளக்குகிறது
اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا
لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ
அவர்கள் அல்லாஹ்வை விட்டு
தம் பாதிரிகளையும்
தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்
ஆனால் அவர்களே
ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை
அவன் இணைவைப்பவற்றை விட்டு மிகவும் பரிசுத்தமானவன்
(அல்குர்ஆன் : 9:31)
பாகம் ஆறு இன்ஷா அல்லாஹ்
தொடரும்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
17-12-2025
Comments
Post a Comment