அறிவீனர்களின் கதறல்களும் ஒப்பாரிகளும்

     அறிவீனர்களின் கதறல்களும்
                     ஒப்பாரிகளும் 
           *****************************
               கட்டுரை எண் 1548
                    *****************

முறையான இறைநம்பிக்கை குடியிருக்கும் முஸ்லிமால் மட்டுமே ஒரு தவறை தவறு என்று முழு மனதுடன் ஏற்க முடியும் 

முறையான இறைநம்பிக்கை இல்லாத எவராலும் ஒரு தவறை
சிறு தவறாக சித்தரிக்கவும் முடியும்
தவறே இல்லை என்று மடமையாக 
மறுத்து மனமுரண்டாக வாதிக்கவும்  இயலும்

இஸ்லாத்தை விமர்சிக்கும் எவரும் 
இதுவரை அறிவுப்பூர்வமாகவோ அல்லது இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றோ ஆதாரங்களுடன் உரியவர்களிடம் நிரூபித்ததும் இல்லை சவால்களை ஏற்றுக்கொண்டதும் இல்லை 

முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்யும் 
அறிவீன செயல்களையும் வரம்பு மீறி நடக்கும் அவலங்களை மட்டுமே இஸ்லாமிய கருத்தாக அவர்களால் வஞ்சகமாக  சித்தரிக்க முடியும்  


அது போன்றவர்களின் செயல்களை அவர்கள் கண்டிப்பதை விட இஸ்லாமிய மார்க்கமே தெளிவாக கடுமையாக  கண்டிக்கிறது என்பதை அவர்களால் நிச்சயம் உணர முடியாது 

காரணம் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் 
முஸ்லிம்கள் என்றாலே தேசப்பற்று இல்லாதவர்களை போன்றும் இருபத்தி நான்கு மணிநேரமும் அவர்களுக்கு எதிராக  துப்பாக்கிகளை தூக்கி கொண்டு அலைந்து கொண்டிருப்பதைப்போன்றும்   பிரம்மையை திணிக்கப்பட்டவர்கள்


அரைகுறை ஆடையுடன் ஆடவர்களின் உள்ளத்தை சீரழிக்கும் கழிசடை பெண்களின் நடைமுறையை கண்டிக்க வக்கற்ற இவர்கள் 
தங்களது மேனியை மறைத்து வெளியுலகில் கண்ணியமாக நடக்கும் ஹிஜாப் அணிந்த பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்தி வைத்திருப்பது போல் நீலிக்கண்ணீர் வடிப்பார்கள்

ஹிஜாப் அணியும் பெண்களே 
ஹிஜாப் அணிவதை கண்ணியமாக கருதும் சூழலில் ஹிஜாபுக்கு சம்மந்தம் இல்லாத இவர்கள் 
ஹிஜாபை கீழ்த்தரமாக சித்தரிப்பது 
அவர்களின் உள்ளத்தில் இருக்கும் இஸ்லாமிய வெறுப்பே தவிர நல்லெண்ணம் 
கடுகளவும் இல்லை

இஸ்லாமிய அடையாளத்துடன் தவறான செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களை முஸ்லிம்களே   கண்டித்தால் கூட கண்டிக்கப்படும் கழிசடைகளின்  உரிமைகளுக்கு எதிராக முஸ்லிம்களே நடப்பது போல் அவதூறை பரப்புவதில்  இனிமை காணுவார்கள் 

சங்கிகள் இதில் மிகவும் 
தேர்ச்சி பெற்றவர்கள் 


கடையநல்லூரை சார்ந்த வஹீதா என்ற பெண் சமூகவலைத்தளத்தில் அரங்கேற்றி வரும் முட்டாள்தனமான செயலுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அறிக்கை போடுவதில் தற்போது மும்முரம்  காட்டுகிறார்கள் எனில் 
அது அப்பெண்ணிண் மீதுள்ள கருணையினால் அல்ல
மாறாக அப்பெண்ணை பகடை காயாக பயன்படுத்தி இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் பொதுவெளியில் இழிவு படுத்துவதே அவர்களின் அடிப்படைக் குறிக்கோளாகும் 

இத்தகைய கழிசடை அறிக்கை போடுபவர்களுக்கு பதில் கூற முனையாதீர்கள் 
காரணம் அவர்களில் ஒருவனும் நேருக்கு நேர் நேர்மையாக  விவாதிக்க வக்கற்றவர்கள் 
படிப்பறிவுக்கும் பொதுஅறிவுக்கும் தூரமானவர்கள் 


தன்னைச்சார்ந்த அப்பாவி இந்து  சமூக மக்களே  நெடுங்காலமாக ஜாதியின் பெயரால் அடக்குமுறை செய்யப்பட்டும் அவமானப்படுத்தப்பட்டும் உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் சூழலில் 
அதை அனுபவப்பூர்வமாக கண்டும் 
பாதிக்கப்படும் தன் சமூக மக்களுக்கும் கூட இதுவரை  குரல் கொடுக்காத 
மனிதநேய மற்ற அரக்கர்கள் 


ஆஷிபா என்ற ஏழு வயது சிறுமியை பூசாரி உட்பட ஏழு குடிகார கழிசடைகள் கோயில் கருவறையில் வைத்து கற்பழித்து படுகொலை செய்து வீசிய கொடூரத்தை கண்டும் 
கண்டன அறிக்கை கூட வெளியிடாது மனிதாபிமானமற்று அக்கொடூரத்தை ரசித்து மகிழ்ந்த  மனித மிருகங்கள் 

இத்தகையோரின் கூப்பாடுகளுக்கு 
இஸ்லாமும் பணியாது 
முஸ்லிம் சமூகமும் அடங்காது 

இஸ்லாமிய அடையாளங்களுடன் பொதுத்தளத்தில் கண்ணியமற்று நடந்து 
அதன் மூலம் சங்கிகளின் விமர்சனங்களுக்கு ஊதுகுழலாய் செயல்படும் கடையநல்லூரை சார்ந்த வஹீதா போன்றவர்களின் விசயத்தில் இஸ்லாமிய ஜமாத்துகள் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும் 
சினிமாவின் சீரழிவாலும் பெற்றோர்களின் கவனமின்மையாலும் வஹீதா போன்றவர்கள் தற்போது முஸ்லிம் சமூகத்திலும் பெருகி வருகின்றனர் 
குறைந்த பட்சம் அத்தகைய குடும்பத்தார்களை ஜமாத்தை விட்டும் அப்புறப்படுத்த வேண்டும் 


இஸ்லாமிய அடையாளத்தை கலைந்து விட்டு அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் 
அதைப்பற்றி முஸ்லிம் சமூகத்திற்கு 
எவ்வித கவலையும் இல்லை 

இஸ்லாமிய அடையாளங்கள் இஸ்லாத்திற்கு கண்ணியம் சேர்க்க வேண்டுமே தவிர
இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் இழிவிற்குள் தள்ளுவதற்கு அல்ல

அவர்கள் திருந்தினாலும் சரி
திருந்தாது அடிபட்டு வருந்தினாலும் சரி 
அது அவர்களின் தனிப்பட்ட உரிமை   

மார்க்கத்தை தெளிவாக துணிவாக எத்தி வைப்பது முஸ்லிம் சமூகத்தின் கடமை 


   நட்புடன் J . யாஸீன் இம்தாதி
                            14-1-26

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்