சிந்தனை என்றால் என்ன
சிந்தனை என்றால் என்ன ***************** கட்டுரை எண் 1517 ************ மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் சிறப்பு வாய்ந்தது பகுத்தறிவாகும் அந்த பகுத்தறிவை பயன்படுத்தி எடுக்கப்படும் சீரிய முடிவையே சிந்தனை என்கிறோம் பகுத்தறிவை பெற்றவர்கள் அனைவரையும் சிந்தனையாளர் என்று குறிப்பிடவும் முடியாது ஒருவரின் சிந்தனையை ஒப்பிட்டு பார்க்காது அவரது சிந்தனையை மட்டும் குருட்டு நம்பிக்கையில் ஏற்றுக்கொள்பவரையும சிந்தனையாளர் என்று குறிப்பிட முடியாது ஒரு மனிதன் சுயமாக சிந்தித்து எடுக்கும் சரியான முடிவுக்கு இரு நன்மை எழுதப்படுகிறது என்று கூறிய நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் ஒரு மனிதன் சுயமாக சிந்தித்து எடுக்கும் தவறான முடிவுக்கும் கூட ஒரு நன்மை எழுதப்படுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறிய...