உலகம் உங்கள் கையில்
உலகம் உங்கள் கையில்
மறுமை ஈமானின் கையில்
*******************
கட்டுரை 1516
************
வாய்ப்புகளை தவற விட்டால் மீண்டும் மறு வாய்ப்பை உருவாக்கி கொள்ளும் ஸ்தலமே உலகம்
தோல்விகளை சந்தித்தால் வெற்றியின் மறு வாசலை நோக்கி பயணிக்கும் சூழல் நிறைந்த
ஸ்தலமே உலகம்
குடும்ப வாழ்வில் விரக்தியா ?
தொழில் நஷ்டமா ?
இது போன்று எதுவாகினும்
அதை புறம் தள்ளி மாற்று வழிகளை உருவாக்கிக்கொள்ளும் ஸ்தலமே உலகம்
ஆனால் மறுமை என்பது
அவ்வாறு அல்ல
எவ்விதமான மாற்று வாய்ப்புகளுக்கும் சலுகைகளுக்கும் இடம் இல்லை
தொழுகையை நிலைநாட்ட தவறி விட்டேன்
நோன்பை புறக்கணித்து வாழ்ந்து விட்டேன்
தீயவனாக வாழ்ந்தே எனது வாழ்நாளை நெடுங்காலம் கழித்து விட்டேன்
ஆனால் இப்போது அதை தவறு என்று உணருகிறேன் எனவே மீண்டும் எனது தவறுகளை திருத்துவதற்கு வாய்ப்புகளை வழங்குவாயாக இறைவா
என்று கதறினால்
அந்த கதறுதலுக்கு இறைவனிடம் கடுகளவு
மதிப்பும் இல்லை
நல்ல குடும்பத்தில் பிறந்தவன்
வலிமார்கள் குடும்பத்தில் பிறந்தவன்
நபிமார்கள் பரம்பரையில் பிறந்தவன் என்ற
எந்த கூப்பாடுகளுக்கும் மறுமையில் மதிப்பு இல்லை
ஆதம் (அலை ) அவர்களுக்கு பிறந்திருப்பினும்
அவர் மகன்களில் ஒருவன் நரகவாதி
இப்ராஹீம் (அலை ) அவர்களை பெற்றெடுத்திருப்பினும் அவரது தந்தை நரகவாதி
நூஹ் (அலை) அவர்களுக்கு பிறந்திப்பினும்
அவரின் மகன் நரகவாதி
நூஹ் (அலை )அவர்களை மணந்திருப்பினும்
அவரது மனைவி நரகவாதி
லூத் (அலை ) அவர்களை மணந்திருப்பினும்
அவரது மனைவி நரகவாதி
நபிகளாரின் சொந்தமாக இருப்பினும்
நபியின் சிறிய தந்தை அபூதாலிப் நரகவாதி
அபூலஹபும் நரகவாதி
ஏன் நபிகளாரை பெற்றெடுத்த பெற்றோர்களும் நரகவாதி
இவைகளை உங்கள் உள்ளம் ஏற்க தயங்கினாலும் வருந்தினாலும் குர்ஆனும் சுன்னாவும் எச்சரிக்கை செய்த ஆணித்தரமான உபதேசங்கள் இவை
குறிப்பாக நபிகளாரின் பெற்றோரை பற்றிய இந்த செய்திகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில் எந்த அல்லாமாவும் உலமாவும் இதற்கு முறையாக மறுப்பை தெரிவிக்கலாம்
ஊசிமுனையில் ஒட்டகம் நுழையும் வரை இறைமறுப்பாளர்களுக்கும் இறைவனின் கட்டளைகளை உதாசீதனம் செய்பவர்களுக்கும் மறுமையில் வெற்றி இல்லை
வாழ்நாளை வீணாக்கி விடாதீர்கள்
படைப்பின் காரணத்தை
சிந்திக்க மறந்து விடாதீர்கள்
உலக மோகத்தில் ஈமானை
அடகு வைத்து விடாதீர்கள்
மரணம் உங்களை தழுவும் வரை
இயன்ற நன்மைகளை செய்யுங்கள்
ஈமானிய நறுமணத்தை நுகருங்கள்
இணை வைத்தல் எனும் பெரும்பாவத்தை மனிதக்கழிவுகளை போல் கேவலமாக கருதுங்கள்
பித்அத்துகளை சாத்தானின் சதியாகவே கருதுங்கள்
اِنَّ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا يَدْخُلُوْنَ الْجَـنَّةَ حَتّٰى يَلِجَ الْجَمَلُ فِىْ سَمِّ الْخِيَاطِ وَكَذٰلِكَ نَجْزِى الْمُجْرِمِيْنَ
எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டாது மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்
(அல்குர்ஆன் : 7:40)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
11-7-2025
9994533265
Comments
Post a Comment