சிந்தனை என்றால் என்ன
சிந்தனை என்றால் என்ன
*****************
கட்டுரை எண் 1517
************
மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் சிறப்பு வாய்ந்தது பகுத்தறிவாகும்
அந்த பகுத்தறிவை பயன்படுத்தி எடுக்கப்படும்
சீரிய முடிவையே சிந்தனை என்கிறோம்
பகுத்தறிவை பெற்றவர்கள் அனைவரையும் சிந்தனையாளர் என்று குறிப்பிடவும் முடியாது
ஒருவரின் சிந்தனையை ஒப்பிட்டு பார்க்காது
அவரது சிந்தனையை மட்டும் குருட்டு நம்பிக்கையில் ஏற்றுக்கொள்பவரையும சிந்தனையாளர் என்று குறிப்பிட முடியாது
ஒரு மனிதன் சுயமாக சிந்தித்து எடுக்கும் சரியான முடிவுக்கு இரு நன்மை எழுதப்படுகிறது என்று கூறிய நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் ஒரு மனிதன் சுயமாக சிந்தித்து எடுக்கும் தவறான முடிவுக்கும் கூட
ஒரு நன்மை எழுதப்படுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறிய கூற்றும் மனிதன் தனது சிந்தனைக்கு கொடுக்க வேண்டிய முக்கியதுவத்தை உணர வைக்கிறது
ஒரு மனிதன் எடுக்கும் சரியான முடிவை புறக்கணிக்க கூடாது என்று அறிவுரை கூறும் இஸ்லாம்
இவர்கள் தான் சரியாக சிந்திப்பார்கள்
இக்காலத்தில் உள்ளவர்களே சரியாக சிந்திப்பார்கள்
இவர்கள் அளவுக்கு வேறு எவரும் சிந்திக்க மாட்டார்கள் இவர்களை மீறி வேறு எவரும் சிந்திக்க கூடாது என்று வரம்பு கட்டுவதை இஸ்லாம் ஏற்க்கவில்லை
இதை சரியாக உணராத வரை வழிகேடுகள் பல உருவங்களில் எக்காலத்திலும் முஸ்லிம் சமூகத்தில் உருவாகிக்கொண்டே இருக்கும்
அவர்கள் குர்ஆன் சுன்னாவை மட்டும் நம்பக்கூடியவர்களாக இருப்பினும் சரியே
எவ்வித மறுப்புக்கும் இடம் இல்லாத திருக்குர்ஆனின் வசனங்களை கூட சிந்திக்க மாட்டீர்களா என்று ஏக இறைவன் திருக்குர்ஆனின் பல இடங்களில் மேற்கோள் காட்டுவதும் மனிதனின் சிந்தனைக்கு இஸ்லாம் கொடுத்துள்ள முக்கியத்துவமே அடிப்படை காரணம்
قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَخَذَ اللّٰهُ سَمْعَكُمْ وَ اَبْصَارَكُمْ وَخَتَمَ عَلٰى قُلُوْبِكُمْ مَّنْ اِلٰـهٌ غَيْرُ اللّٰهِ يَاْتِيْكُمْ
بِهِ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُوْنَ
அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும் பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு
உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இறைவன் கொடுப்பான்?
என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? என்று (நபியே!) நீர் கேட்பீராக (நம்) அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக; (இவ்வாறு இருந்தும்) பின்னரும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்
(அல்குர்ஆன் : 6:46)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
16-7-2025
Comments
Post a Comment