மரண தண்டனை மசோதா

      தாமதமான முடிவானாலும்

     தேவையான முடிவே மரண

                !!  தண்டனை !!

          ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

    BJP அரசாங்கத்திற்க்கு நன்றி
           ••••••••••••••••••••••••••••••
     21-04-18- சனி  கிழமை
             *********************
          கட்டுரை எண் 1145
                   -------------------
   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************   

                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★
     

ஆசிபா எனும் ஏழ்மை சிறுமியை காவி சிந்தனையுடைய எட்டு  காமுகர்கள் கூட்டு சேர்ந்து புனிதம் வாய்ந்த  கோயிலில் ஒரு வாரம் அடைத்து வைத்து  கொடூரமாக அச்சிறுமியை  கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை  கண்டித்து ஒட்டு மொத்த இந்திய குடிமக்களும் ஜாதி மதம் மொழி இனம்  கடந்து தங்களது ஆழமான எதிர்ப்பை பல விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்

அதன் விளைவாக இது வரை ஆசிபா வழக்கின்  குற்றவாளிகளின் விசயத்தில் அக்கரை காட்டாத பீஜேபி அரசாங்கம் தற்போது 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்பு வன்முறை செய்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியுள்ளது

பிரதமர் மோடி தலைமயில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை (21-04-18) கூட்டத்தில் பாலியல் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை கொடுத்தால் தான் குற்றங்கள் குறையும் என்பதை மிக மிக தாமதமாக மத்திய அரசு முடிவு செய்திருந்தாலும் அதை பாராட்டுவதிலும் வரவேற்பதிலும்  நமக்கு மட்டில்லா மகிழ்ச்சி  தான்

அதே நேரம் இந்திய திருநாட்டின் சட்டங்களில் அநேகமானவை ஏட்டளவு  சட்டங்களாக இருப்பதை போல் புதுமையான இந்த சட்டமும் அரசியல் சாசனத்தில்  ஏட்டளவில் மட்டும்  இருக்குமானால் இது போல் குற்றவாளிகள் வெளியில் நடமாடும் போது நம் நாட்டு குடி மக்களே குற்றவாளிகளை நடுத்தெருவில் வைத்து அடித்தே கொல்ல வேண்டும் என்ற மனப்பான்மையில் தான் உள்ளார்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள கடமைபட்டுள்ளனர்

அதே நேரம் இந்த புதுமையான சட்டத்தை கொண்டு வருவதற்க்கு பல காரணங்கள் இருந்தாலும் மூலமான காரணம் ஆசிபா எனும் சிறுமிக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம் தான் என்பதை நினைவில் வைத்து

ஆசிபா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் அனைவருக்கும் தயவு தாட்சணியம் இன்றி உடனடியாக  மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்திய  நாட்டு மக்களின் எதிர் பார்ப்பு

அது போக இது போல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களை கண்டறிந்து

அதற்க்கு மூல காரணமாக அமைந்திருக்கும் ஆபாச திரைப்படங்கள் „ ஒழுக்கமற்ற கட்டுப்பாடு இல்லாத சினிமா சீரியல் தொலை காட்சி நிகழ்ச்சிகள் „பொது இடங்களில் ஆடவர்களை சீரழிப்பது போல் சுதந்திரத்தின் பெயரால்  பெண்கள் உடுத்தும் அரை குறை ஆடைகள் அனைத்திற்க்கும் கடுமையான தடைகளை விதித்து அதை மீறுவோர் மீதும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்

اَنَّ النَّفْسَ بِالنَّفْسِۙ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّۙ وَالْجُرُوْحَ قِصَاصٌ‌ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ‌

உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்  காயங்களுக்கு ( சமமான காயங்களாகவும்) நிச்சயமாக ( குற்றவாளிகளுக்கு அரசாங்கம் சார்பாக )பழி வாங்கப்படும் என்று
( சட்டம்)  விதித்திருந்தோம்

எனினும் (பாதிக்கப்பட்ட)  ஒருவர் (குற்றவாளியை பழி வாங்காது முறையாக மன்னித்து விட்டால் அந்த காரியம்  ) அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்

             (அல்குர்ஆன் : 5:45)

            நட்புடன் J. இம்தாதி
  


Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்