சுபுஹான மவ்லீத்
சுபுஹான மவ்லீது
🚧 🚧 🚧 🚧 🚧
05-11-19 J . Yaseen iMthadhi
**********************
கட்டுரை எண் 1279
!!J . Yaseen iMthadhi !!
*************
﷽
!!!!!!!!!!!!!!!!!
ஒரு செயலை இபாதத் என்று சொல்பவர்கள் தான் அதற்கான சான்றுகளை குர்ஆன் ஹதீஸ் மூலம் நிரூபிக்க வேண்டும்
அதுவும் பொருத்தமான ஆதாரங்களை காட்டி நிரூபிக்க வேண்டும்
இரண்டு ரக்அத் தொழுவதில் என்ன குற்றம் உள்ளது என்று வாதித்து கடமையான இரண்டு ரக்அத் சுபுஹ் தொழுகையை ஒருவர் நான்கு ரக்அத்துகளாக மாற்றினால் அவரை வழிகேடர் என்று தான் மவ்லீத் பாடலை சுன்னத்தாக நினைப்போர் கூட குற்றம் சாட்டுவார்கள்
இஸ்லாத்தில் இருக்கும் ஒன்றை கூட்டி செய்தாலே அதை இபாதத் இல்லை என்று மறுப்போர் இஸ்லாத்தில் இல்லாத மவ்லீது பாடலை இபாதத்தாக கருதுவதே முரண்பாடாகும்
நபிகளார் விரும்பிய விதத்தில் அவர்களின் சொல் செயல் அங்கீகாரத்தை பின்பற்றுவது தான் நபிகள் நாயகம்( ஸல்) அவர்களை புகழ்ததாக பொருளே தவிர
நபிகளாரே கற்று தராத விதத்தில் வரம்பு மீறிய பாடல்களை எழுதி வைத்து கொண்டு அதை படிப்பது சுன்னத் என்றும் நபிகளாரை புகழ்வது என்றும் கருதுவது தன்னை தானே நரக படுகுழிக்கு கொண்டு செல்லும் செயலாகும்
மத்ஹபை பின்பற்றுவது தான் சொர்க்கத்திற்கு வழிகாட்டும் என்று சொல்பவர்கள் அந்த மத்ஹப் கிதாபுகளில் கூட இல்லாத கண்ணியம் மிகுந்த நான்கு இமாம்களும் ஓதாத கற்று தராத மவ்லீதை புனிதமாக படிப்பது உச்ச கட்ட வரம்பு மீறலாகும்
சுருக்கமாக சொன்னால் மவ்லீத் என்பது குர்ஆன் ஹதீசிலும் இல்லை மத்ஹப் இமாம்கள் எழுதிய கிதாபுகளிலும் இல்லை
அவ்வாறு இருந்தால் அதன் ஞானம் உடையோர் தெளிவான சான்றை நிரூபிக்கவும்
ஒரு எழுத்துக்கு பத்து நன்மை என்று உத்திரவாதம் வழங்கப்பட்ட இறை மறை திருக்குர்ஆனை அதன் விளக்கமான நபிமொழிகளை அன்றாடம் படிக்க வேண்டிய இறையில்லத்தில் இறைவன் கற்று தராத எழுதியது யார் என்றே உறுதியாக சொல்ல முடியாத மவ்லீத் அரபு பாடல்களை படிப்பதை புனிதம் என்று கருதும் அளவு தான் முஸ்லிம் சமுதாயத்தின் மார்க்க ஞானம் உள்ளது
اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள் அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள் நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்
(அல்குர்ஆன் : 7:3)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment