பள்ளி நிர்வாகிகள் கவனத்திற்கு
பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும்
முஸ்லிம் சமூகத்திற்கும்
வேண்டுகோள்
******************************
கட்டுரை எண் 1549
*****************
ஜும்மாவுக்கு ஒரு இமாம் அழைக்கப்பட்டால் அவரது சூழ்நிலைகளை ஜும்மாவுக்கு அழைக்கும் நிர்வாகிகள் உள்வாங்கி அதற்கு ஏற்ற நிலையில் செயல்பட வேண்டும்
தங்களிடம் இயலாமை இருந்தால்
அதை வெளிப்படையாக இமாமிடம் முற்கூட்டியே கூறி விட வேண்டும்
ஒரு சில இடங்களில் ஜும்மாவுக்கு அழைக்கப்படும் இமாமுக்கு
மதிய உணவு ஏற்பாடும் செய்வதில்லை
உணவு அருந்தி விட்டு செல்கிறீர்களா ?
என்றும் கூட கேட்பது இல்லை
ஒரு இமாம் அவரது ஊருக்கு அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு ஜும்மாவுக்கு அழைக்கப்பட்டால் கூட ஜும்மா முடிந்து உடனடியாக இல்லம் நோக்கி பயணித்து விடுவார்
இன்னும் சில இமாம்கள் அவர்களின் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு காலையே பயணம் செய்து ஜும்மாவுக்கு அழைக்கப்பட்ட ஊருக்கு செல்வார்கள்
அவர்கள் வீடு திரும்பும் போது
அசர் அல்லது மஃரிப் நேரம் நெருங்கி விடும்
அத்தகைய நிலையில் உள்ளவர்களை அழைத்தால் அவர்கள் வருகை தரும் போக்குவரத்து செலவு உட்பட ஹதியாக்கள் கொடுப்பதே பண்பாடுள்ள செயலாகும்
வேலைக்கு கூலியை கேட்டு வாங்குவதைப்போல் இதற்கும் கூலியை கேட்டு வாங்கும் வழக்கம் இமாம்களிடத்தில் இல்லை
காரணம் இமாமத் பணியை கூலி வேலையாக கருதி எந்த இமாமும் வருவது இல்லை
சுயமரியாதையின் காரணமாகவும் கூச்சவுணர்வின் காரணமாகவும் அமைதியாக
வீடு திரும்பும் பல இமாம்களின் சங்கடங்களை நாமே கேள்விப்பட்டுள்ளோம்
அனுபவப்பூர்வமாகவும் சில இடங்களில் உணர்ந்துள்ளோம்
பல வருடமாக இமாம்களின் உள்ளத்தில் இருக்கும் ஆதங்கத்தை இப்பதிவின் மூலம்
நான் வெளிப்படுத்தியுள்ளேன்
பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற பழமொழிக்கு ஏற்று நான் இவ்விசயத்தை முஸ்லிம் சமூகத்திற்கு பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளேன்
மேற்கூறிய விசயத்திற்காக பள்ளிவாசல் நிர்வாகிகள் அவர்களின் பள்ளி உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்தாலே போதுமானது
அவ்வாறு கோரிக்கை வைத்தால் அனைவரும் நன்மையை நாடி மறுப்பில்லாது போட்டி போட்டு இமாமுக்கு உரிய தேவைகளை நிறைவேற்ற
நிச்சயம் முன் வருவார்கள்
ஆனால் அதைப்பற்றி சில நிர்வாகிகள் சிந்திப்பதே இல்லை
ஜும்மாவுக்கு வருவார்கள்
பயான் செய்வார்கள்
கொடுத்ததை பெற்றுக்கொள்வார்கள்
வீட்டுக்கு திரும்பி விடுவார்கள் என்றளவுக்கு மட்டுமே சிலரது செயல்பாடுகள் உள்ளது
இவ்விசயத்தில் விதிவிலக்கு பெற்று இமாம்களை தன்னிறைவுடன் திருப்பி அனுப்பும்
பல பள்ளிவாசல் நிர்வாகிகளும் தமிழகத்தில் பரவலாக உள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை
இப்பதிவு சமூகத்தை குறைப்படுத்தும் பதிவு அல்ல
மாறாக பல இமாம்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பதிவு மட்டுமே
இப்பதிவை படிக்கும் பல இமாம்கள் மனதளவில் தங்கள் ஆதங்கத்தை இப்போதாவது பதிவின் மூலம் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார் என்று அகமகிழ்வார்களே தவிர
ஆம் இது உண்மை என்று அவர்களும் தங்களது ஒப்புதல் வாக்குமூலத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த முன் வர மாட்டார்கள் 😀😀😃😃😃
இப்பதிவின் நியாயத்தை முஸ்லிம் சமூகமும் பள்ளி நிர்வாகிகளிடம் எத்தி வைக்க வேண்டும்
சமூகத்திற்காக மார்க்கத்திற்காக தன் நேரத்தை ஒதுக்கும் அழைப்பாளர்களின் நிலை அறிந்து அரவணைக்கும் நற்பண்பை சமூகம் கண்டு கொள்ளாது இருந்தால் மார்க்கம் அனுமதிக்காத பித்அத்துகளை நடைமுறை படுத்தி
தன் தேவையை பூர்த்தி செய்யும் நிலையே அழைப்பாளர்களுக்கு ஏற்படும்
அல்லது அழைப்புப்பணியை விட்டு ஒதுங்கி
வேறு வேலைகளில் முழுமையாக அழைப்பாளர்கள் கவனம் செலுத்தும் சூழ்நிலையே ஏற்படும்
لِلْفُقَرَآءِ الَّذِيْنَ اُحْصِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَطِيْعُوْنَ ضَرْبًا فِى الْاَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَآءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْ لَا يَسْــٴَــلُوْنَ النَّاسَ اِلْحَــافًا وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ
பூமியில் நடமாடி (தன் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும்
(பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்
அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்
அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள் (இத்தகையோருக்காக) நல்லவைகளில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும்
அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்
(அல்குர்ஆன் : 2:273)
عن أنس قال كان أهل الصفة فقراء من المهاجرين فقال النبي صلى الله عليه وسلم: من كان عنده طعام اثنين فليذهب بثالث ومن كان عنده طعام أربعة فليذهب بخامس أو بسادس
(صحيح مسلم 2055)
அனஸ் (ரலி) கூறுகிறார்
அஹ்லு ஸுஃப்பாவுக்கும்
(மார்க்கம் மற்றும் அழைப்புப்பணியில் ஈடுபட்டவர்களை குறிக்கும் சொல் )
முஹாஜிரீனில் (மக்காவை துறந்து மதீனாவுக்கு தியாகப்பயணம் செய்தவர்களில் வறியவர்கள் விசயத்திலும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
இருவர் சாப்பிடும் உணவு உள்ளவர்
மூன்றாவது ஒருவரை அழைத்துச் செல்லட்டும்
நான்கு நபர் சாப்பிடும் உணவு உள்ளவர்
ஐந்து அல்லது ஆறு நபரை அழைத்துச் செல்லட்டும்
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: مَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ، فَقَدْ غَزَا
(صحيح البخاري 2843 / مسلم 1895)
அல்லாஹ்வின் பாதையில் உழைப்போருக்குத் தேவையானதை (உதவி பொருள் முதலியவை) ஏற்படுத்தி கொடுப்பவர்
அவரே (அந்த உழைப்பின் நன்மையில் )
பங்கு பெற்றவர் ஆகிறார்
இமாம் இப்னு அல்-ஜவ்ஸி (ரஹி):
"وكان السلف يعينون طلاب العلم ويطعمونهم ولا يتركونهم للجوع"
(صفة الصفوة — ج 2 / ص 34)
(சஹாபாக்கள் & தாபிஈன்கள் )
கூறிய கருத்து
மார்க்க கல்வி கற்றவர்களுக்கு
உதவியும் உணவும் வழங்கப்பட்டது
அவர்களை பசியால் வருந்தவிடவில்லை
இப்னு கத்தீர் (ரஹி)
அஹ்லு ஸஃப்பா குறித்து கூறுகிறார்
"وكانوا فقراء فكان الصحابة يواسونهم ويطعمونهم"
(البداية والنهاية — ج 3 / ص 225)
(மார்க்கத்திற்காக அர்ப்பணித்தவர்கள்) வறியவர்களாக இருந்தார்கள்
சஹாபாக்கள் அவர்களுக்கு உணவும்
ஆதரவும் வழங்கினர்
இப்னு ரஜப் (ஹம்பலி) கூறுகிறார்
"وكان السلف يكرمون حملة العلم ويقومون بحوائجهم"
(فضل علم السلف — ص 43)
மார்க்க முன்னோடிகளை மதித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றினர்
இமாம் நவவி المجموع (அல்-மஜ்மூ) கிதாபில் குறிப்பிடுகிறார்
"ويجوز أن يصرف من الوقف إلى العلماء وطلبة العلم لأنهم من مصالح المسلمين"
(المجموع، ج 6 / ص 238)
வக்ஃப் நிதியை உலமா மற்றும் இல்ம் கற்றவர்களுக்கு வழங்குவது அனுமதிக்கப்படுகிறது
ஏனெனில் அவர்கள் முஸ்லிம்களின்
நலனுக்காக உள்ளவர்கள்
"ولا ينبغي أن يشغل طالب العلم بالكسب فإنه يقطع عن مهمته"
(المجموع، ج 1 / ص 33)
மார்க்கம் கற்றவர் தொழில் மற்றும் வேலைச்சுமையால் கவலையடையக்கூடாது
அது அவரின் மார்க்க பணியை தடுக்கிறது
நவவியின் ஆழமான கருத்து:
"ومساعدة طلاب العلم من أفضل القرب"
(شرح النووي على مسلم — ج 1 / ص 88)
மார்க்கம் கற்றவர்களுக்கு உதவுவது
சிறந்த ஈமானுக்கு நெருக்கமாகும்
இவ்விசயத்தில் இதர கருத்துக்கள் குறிப்பிட விரும்புவோர் எனது வாட்சப் எண் 9994533265 மூலம் பதிக்கலாம்
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
16-1-2026
Comments
Post a Comment