அவ்லியா தொடர் பாகம் இரண்டு

    மகான்களை மட்டப்படுத்தும்
               ஞானசூனியங்கள் 
           *****************************
    பாகம் இரண்டு கட்டுரை எண் 1542
                    *****************

நல்லடியார்கள் மதிக்கத்தக்கவர்கள்
இறையன்பை பெற்றவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை


நல்லடியார்கள் என்பவர்கள் யார்  
தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே நல்லடியார்களா   ?

ஏன் உயிருடன் வாழும் 
ஒரு நல்லடியாரையும் மகான் அவ்லியா  என்று முஸ்லிம்கள்  குறிப்பிடுவது இல்லை  

ஏன் உயிருடன் வாழும் 
ஒரு நல்லடியாரையும் முஸ்லிம்கள் தேடிச்சென்று நேர்சை செய்வது இல்லை 

ஏன் உயிருடன் வாழும் ஒரு நல்லடியாரையும் தேடிச்சென்று பிரார்த்தனை செய்வது இல்லை ?

ஏன் உயிருடன் வாழும் ஒரு நல்லடியாருக்காகவும் விழாக்கள் கொண்டாடுவது இல்லை 

நல்லடியார்கள் என்றாலே தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குர்ஆன் சுன்னாவில் குறிப்பிடப்படாத  நிபந்தனையா ?

நல்லடியார்கள் என்றாலே மரணத்தை தழுவியிருக்க வேண்டும் என்பது குர்ஆன் சுன்னாவில் குறிப்பிடப்படாத நிபந்தனையா  ?

என்ற கேள்விகளுக்கு எவரிடமும் முறையான பதில் இல்லை 
தர்ஹாவை நியாயப்படுத்தும் ஆலீம்களிடமும் ஆதாரப்பூர்வமான தெளிவு இல்லை 


தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் மகான்கள் என்றால் சுன்னத் ஜமாத்தினர்கள் கட்டிய தர்ஹாக்களை விட ஷியாக்கள் கட்டி எழுப்பிய தர்ஹாக்களே உலகில் ஏராளம் 
அப்படியானால் ஷியா என்ற வழிகேடு கொள்கையை நியாயப்படுத்தி மரணித்தவர்களும்  நல்லடியார்கள் தானா  ?
அவ்வாறெனில் ஷியா கொள்கையை வழிகேடு என்று சுன்னத் ஜமாத்தினர்கள் கடுமையாக விமர்சிப்பது எதனால் ?

இத்தகைய பல நியாயமான எதிர் கேள்விகளுக்கும் தர்ஹாவை நியாயப்படுத்தும் எவரிடமும் முறையான பதில் இல்லை 

மாறாக குர்ஆன் சுன்னாவை மூலமாக வைத்து விமர்சனம் செய்யும் மக்களை வழிகேடர்கள் என்றும் குழப்பவாதிகள் என்றும் அப்பாவி மக்களை சிந்திக்க விடாது வெறுப்பை ஊட்டுவது மட்டுமே இவர்களின் குறிக்கோள் என்பது திட்டவட்டமாக தெரிகிறது 


اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ‏

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ அவர்களுக்கே அபயமுண்டு இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்

(அல்குர்ஆன் : 6:82)




    நட்புடன்  . J . யாஸீன் இம்தாதி
                        14-12-2025



Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்