அவ்லியா தொடர் பாகம் ஒன்று
அவ்லியா
தவறான புரிதல்களும் தெளிவான
புரிதல்களும் பாகம் ஒன்று
******************************
அவ்லியா என்ற அரபு பதத்திற்கு
நேசர்கள் என்ற பன்மை பொருள்
வலி என்ற பதத்திற்கு நேசர் என்ற
ஒருமை பொருள்
அவ்லியா அல்லாஹ் என்றால்
அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள்
اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
(விசுவாசிகளே!) அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்
(அல்குர்ஆன் : 10:62)
அவ்லியா ஷைத்தான் என்றால்
சாத்தானின் நேசர்கள் என்று பொருள்
اَلَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ الطَّاغُوْتِ
فَقَاتِلُوْۤا اَوْلِيَآءَ الشَّيْطٰنِ اِنَّ كَيْدَ الشَّيْطٰنِ كَانَ ضَعِيْفًا
நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள் நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நேசர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானது
(அல்குர்ஆன் : 4:76)
அவ்லியா அல்லது வலி என்ற அரபு பதத்தை எதனுடன் இணைக்கப்படுகிறதோ
அதன் நேசர்கள் என்பதே சரியான பொருள் கொடுக்கப்படும்
அவ்லியா என்றாலே நல்லடியார்கள் மகான்கள் இறைநேச செல்வர்கள் என்பது இந்திய முஸ்லிம்களின் தவறான புரிதலாகும்
அவ்லியாஅல்கஃம்ரு என்ற பதத்திற்கு மதுபானபிரியர்கள் என்று பொருள்
வலியுல்லாஹ் என்றால்
அல்லாஹ்வின் நேசர்
வலியுல் முருகன் என்றால்
முருகனின் நேசர்
அவ்லியா என்ற பதத்தின் பொருளை விளக்குவது மட்டுமே இந்த முதல் பதிவின் சாரம்
அவ்லியாக்களைப்பற்றி அறிய வேண்டிய
தவிர்க்க வேண்டிய பல தகவல்கள் குர்ஆன் சுன்னா அடிப்படையில் இத்தொடரில் இடம் பெறும்
இன்ஷா அல்லாஹ் பாகம் இரண்டு தொடரும் !!!
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
11-12-2025
Comments
Post a Comment