மனிதனின் சிந்தனைக்கு

        மனிதனின் சிந்தனைக்கு
                 *********************

மரணம் என்ற ஒரு சொல்
ஒரு மனிதனின் சகாப்தத்தை முடித்து விடுகிறது 


உலகம் அஞ்சும் அதிகாரியாக
உலகம் போற்றும் அறிவாளியாக
உலகம் காண துடிக்கும் முகமாக
உலகம் தூற்றும் தீயவனாக
இருப்பினும் அவனது நினைவுகள் 
குறுகிய நாளில்  மங்கி விடும் 
அல்லது மறைந்து விடும்
அல்லது மறைக்கப்பட்டு விடும்
அல்லது திரிக்கப்பட்டு விடும் 

உற்றார் உறவினர்களும் 
என்றோ ஒரு நாள் நினைவு கூறும்
வரிசையில் நிறுத்தப்பட்டு விடும் 


எவருடைய இழப்பிற்கும்
மரணத்திற்கும் பிரபஞ்சத்தின்
செயல்பாடுகள் ஒரு நொடியும் 
நின்றதும் இல்லை 
தடுமாறியது இல்லை 

காரணம் பிரபஞ்சம் வாழ்பவனுக்கு
உரித்தானது 
மரித்தவனுக்கு மாயமானது 

உயிர்
எங்கிருந்து வந்தது 
எந்த நிமிடம் உடலில் நுழைந்தது 
எந்த நிமிடம் உடலை விட்டுபிரிந்தது
எந்த முறையில் பிரிந்தது 
என்பதை துல்லியமாக கண்டறியும் 
ஞானம் எவருக்கும் இல்லை 

பிரபஞ்சத்தை உருவாக்கியவனே
உயிர்களை செதுக்கியவன்
என்பதற்கு ஆராய்சிப்புலமை தேவை இல்லை
பகுத்தறிவே போதுமானது 


كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ‌ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? 
உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்
பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்
மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்
இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப்படுவீர்கள்

(அல்குர்ஆன் : 2:28)



     நட்புடன்  J . யாஸீன் இம்தாதி
                           7-12-2025



Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்